நடிகை ஜோதிகா, நடிகர்கள் மாதவன், அஜய் தேவ்கன் ஆகியோர் இணைந்து நடித்துள்ள ‘ஷைத்தான்’ (Shaitaan Teaser) படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. விகாஸ் பாஹ்ல் இயக்கத்தில் அமானுஷ்யம், த்ரில்லர் கலந்த திகில் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் ஷைத்தான். இந்தப் படத்தின் மூலம் நடிகை ஜோதிகா பல ஆண்டுகளுக்குப் பின் நேரடியாக பாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கிறார்.
முன்னதாக வெளியான இப்படத்தின் போஸ்டர் பில்லி, சூனிய உருவ பொம்மைகளுடன் வெளியாகி எதிர்பார்ப்புகளை அதிகரிட்த்தது. இந்நிலையில், தற்போது இந்தப் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
ஷைத்தான் எனும் பெயருக்கேற்றபடி, ஷைத்தான் இந்த டீசரில் உரை நிகழ்த்துவது போல அமைந்துள்ள நிலையில், ஆக்கும் சக்தி, அழிக்கும் சக்தி, நரகத்தை ஆள்பவன், நானே விஷம், நானே மருந்து என அமானுஷ்ய வசனங்களுடன் தொடங்கி, பரபரப்பை ஏற்படுத்துகிறது.
மேலும் “ஒரு விளையாட்டு விளையாடலாமா?” என பில்லி சூனிய பொம்மை, மாதவன் சிரிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில், ஜோதிகாவும், அஜய் தேவ்கனும் அரண்டு நிற்கும் காட்சிகளும் இந்த டீசரில் இடம்பெற்றுள்ளன.
திகில் காட்சிகள் மற்றும் மாதவனின் அச்சுறுத்தும் குரலுடன் வெளியாகியுள்ள இந்த டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளது.
வரும் மார்ச் 8ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.