Shah Rukh Khan : தன்னுடன் அடுத்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறாரா ஷாருக்கான் ? யஷ் சொன்ன பதில் இதுதான்

தனது படத்தில் நடிகர் ஷாருக் கான் நடிப்பதாக வெளியானத் தகவல் குறித்து நடிகர் யாஷ் பதிலளித்துள்ளார்.

டாக்ஸிக்

தமிழ் சினிமாவுக்கு ஏற்கெனவே பரிச்சயமானவர் கீது மோகன்தாஸ் .  சத்யராஜ் – சுஹாசினி நடித்த ‘என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் . தொடர்ந்து நடிகர் மாதவன் உடன் ‘நள தமயந்தி’ உள்ளிட்ட தமிழ் படங்களிலும் ஹீரோயினாக கீது மோகன்தாஸ் நடித்துள்ளார்.

பெரும்பாலும் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ள கீது மோகன்தாஸ், ‘லையர்ஸ் டைஸ்’ என்ற இந்தி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.இந்தப் படத்திற்கான தேசிய விருதை வென்ற இவர்,  நடிகர் நிவின் பாலியை வைத்து இயக்கிய மூத்தோன் திரைப்படத்துக்காக பெரும் பாராட்டுகளைக் குவித்தார்.  தற்போது கீது மோகன்தாஸ் யஷ் உடன் முதன்முதலாகக் கைகோர்த்துள்ளது சினிமா வட்டாரத்தில் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. மிகத்தீவிரமாக சினிமாக்களை இயக்கும் கீது மோகன்தாஸ் ஒரு பாப்புலர் ஸ்டாரான யஷ்ஷுடன் இணைவது குறித்து அனைவருக்கும் ஆச்சரியம்தான். மேலும் இந்தப் படத்திற்கு அவர் டாக்ஸிக் என்று பெயர் வைத்தது இன்னும் ஆச்சரியத்தை கிளப்பியது.

இது குறித்து பேசிய கீது மோகன்தாஸ் “என்னுடைய இரண்டு படங்களும் சர்வதேச அங்கீகாரம் பெற்றன, ஆனால் என்னுடைய சொந்த ஊரில் மக்கள் ரசிக்கும் வகையிலான ஒரு படத்தை நான் எடுக்க ஆசைப்படுகிறேன். நான் சந்தித்த மிகவும் புத்திசாலித்தனமான மனிதர்களில் ஒருவர் யஷ், அவருடன் இணைந்து இந்த மாயாஜால பயணத்தை எங்கள் குழு தொடங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்”  என்று முன்னதாக கூறியிருந்தார்.

யார் கதாநாயகி?

இப்படத்தில் யஷ்ஷுக்கு கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்க இருப்பதாக முன்னதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது . இதனைத் தொடர்ந்து பாலிவுட் நடிகை கரீனா கபூர் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது. படக்குழு சார்பாக எந்த விதமான அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியாகாததால் இந்த குழப்பஙக்ள் நிலவி வருகின்றன.

ஷாருக்கான் நடிக்கிறாரா?

தற்போது இப்படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக் கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஷாருக்கானிடம் கதை சொல்லப்பட்டிருப்பதாகவும் அவர் சரி என்றும் இல்லை என்றும் எந்த விதமான பதிலும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் யஷ், ஷாருக்கான் இப்படத்தில்  நடிப்பது என்பது உறுதியான தகவல் இல்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

மேலும் இப்படத்தின்  நடிகர்கள் பற்றிய தகவல்களை. கூடிய விரைவில் படக்குழு அறிவிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Source link