ரயில் மோதி ஒரே நேரத்தில் 7 யானைகள் பலி… அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்…
அசாம் மாநிலத்தில் ரயில் மோதியதில் ஒரே நேரத்தில் 7 யானைகள் உயிரிழந்தது, அந்த ரயிலில் பயணித்த பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சைராங்க் டெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில், அசாம் மாநிலம் லிம்திங் மண்டலத்தில் உள்ள ஜமுனாமுக் காம்பூர் பகுதியில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, ரயில் தண்டவாளங்களை கடக்க யானை கூட்டம் சென்று கொண்டிருந்தது.
வேகமாக வந்த ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில், யானைகள் மீதி மோதி நின்றது. ரயில் லோகோ பைலட் துரிதமாக செயல்பட்டு ரயிலை நிறுத்தியதால், பெட்டிகள் மட்டும் தடம் புரண்ட நிலையில் பெரும் விபத்து ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. அதே நேரத்தில், ரயிலில் அடிபட்ட 7 யானைகள் உயிரிழந்தன.
இதில், 4 குட்டி யானைகளும், 3 பெரிய யானைகளும் அடங்கம் என தெரிய வந்துள்ளது.
https://x.com/ANI/status/2002232125970657649?s=20
இதைப்பார்த்து, ரயிலில் வந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். யானைகளை அப்புறப்படுத்திவிட்டு, ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. வனத்துறையினர், சம்பவ இடத்தில் யானைகளை சோதனை செய்து, புதைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ரயில் மோதி ஒரே நேரத்தில் 7 காட்டு யானைகள் உயிரிழந்தது அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.
