சாகித்ய அகாடமி:

இந்தியாவில் ஆண்டுதோறும் சிறந்த இலக்கிய படைப்பாளிகளைக் கவுரவிக்கும் வகையில் சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது. 24 இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல் போன்ற பலவகையான படைப்புகளுக்குச் சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில், மொழிபெயர்ப்பு பிரிவில் சிறந்த படைப்புகளுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றவர்களின் தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

சிறந்த மொழிபெயர்ப்பு விருது:

அதன்படி தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு வழங்கப்பட்டுள்ளது. மமங் தாய் எழுதிய தி பிளாக் ஹில் எனும் ஆங்கில நாவலைத் தமிழில் மொழிபெயர்த்ததற்கா அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த நூல் தமிழில் ‘கருங்குன்றம்’ என்ற பெயரில் வெளிவந்துள்ளது. அவர், வேறு மொழிகளில் இருந்து எனது அரசியல் வாழ்க்கை, மகாத்மா காந்தியின் சிந்தனைகள், புரட்சி 185, இந்தியாவின் தேசியப் பண்பாடு, இந்திராகாந்தி , புத்தாக்க வாழ்வியல் கல்வி, அறிவுத்தேடலில் அறிவியல் உணர்வு, உறவுப்பாலம்: இலங்கைச் சிறுகதைகள், சுவாமி விவேகானந்தர்: இளையோரின் எழுச்சி நாயகன், கண்ணியமான பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்துள்ளார்.

மொத்தம் 24 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து 24 மொழிப்பெயர்ப்பாளர்களுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது. விருது வென்றவர்களுக்கு ரூபாய் 50,000 வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: Akash Deep: இந்திய அணியில் இடம் பிடித்த ஆகாஷ் தீப்! யார் இவர்? கடந்து வந்த லட்சியப்பாதை!

மேலும் படிக்க: India vs England Test: 4வது டெஸ்ட்! சதம் விளாசிய ஜோரூட்! 302 ரன்கள் குவித்த இங்கிலாந்து! வெற்றிநடை போடுமா இந்தியா?