T20 WC : நெதர்லாந்தை புரட்டி எடுத்த தென்ஆப்பிரிக்கா… ஸ்கோர் விவரத்தை பாருங்க…

உலக‍க் கோப்பை டி 20 போட்டியில் நெதர்லாந்தை புரட்டிப்போட்டு தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது.

அமெரி்க்காவின் நியூ யார்க் நகரில் உள்ள நசாவ் கவுண்டி இன்டர்நேஷனல் கிரிக்கெட் மைதானத்தில் 16ஆவது போட்டி நடைபெற்றது. இதில், டி பிரிவில் உள்ள நெதர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதின.

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி, பவுலிங்கை தேர்வு செய்த‍து. போட்டி தொடகியதில் இருந்தே தென் ஆப்பிரிக்க வீர‍ர்கள் அதிரடி பந்துவீச்சில் ஈடுபட்டனர். அடுத்த‍டுத்து விக்கெட்டுகளை இழந்து நெதர்லாந்து அணி தடுமாறியது

நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர் முடிவுஇல் நெதர்லாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்களை மட்டுமே எடுத்த‍து. அந்த அணியில், அதிகபட்சமாக, சைபிராண்ட் எங்கல்பிரிட்ச் 40 ரன்களை எடுத்தார். வான் பீக் 23 ரன்களும், விக்ரம்ஜித் சிங் 12 ரன்களையும், கேப்டன் எட்வர்ட் 10 ரன்களையும் எடுத்தனர்.

பேஸ் டி லீட் 6 ரன்களையும், மேக்ஸ் ஓடோட் 2 ரன்களையும், வான் மீகெரென் ஒரு ரன்னையும் எடுத்தனர். அதே நேரத்தில், ஓப்பனர் மிச்சேல் லெவிட், தேஜா நேதமுன்னுரு, டிம் பிங்கிள் ஆகியோர் டக் அவுட் ஆகினர்.

இந்த அணி மொத்தமாக 2 சிக்ஸ்களையும், 6 ஃபோர்களையும் மட்டுமே விளாசியது. அதே நேரத்தில், தென் ஆப்பிரிக்கா தரப்பில், ஓட்னேல் பார்ட்மன் 4 விக்கெட்டுகளையும், மார்கோ ஜான்சன் மற்றும் நார்ட்ஜே தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

104 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியும் அடுத்த‍டுத்து விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சியை கொடுத்து. ஓபனராக இறங்கிய ரீசா ஹான்ட்ரிக்ஸ் 3 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவருடன் ஜோடியாக களமிறங்கிய குயிடன் டி காக் டக் அவுட் ஆன்றார்.

அடுத்து களமிறங்கிய ய்டன் மார்க்கராமும் டக் அவுட் ஆக, பின்னர் களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 33 ரன்களை குவித்தார். அதே நேரத்தில் ஹென்ரிட்ச் கிளாசன் 4 ரன்களுக்கு அவுட் ஆனதும், டேவிட் மில்லர் களமிறங்கி பவுன்டரிகளை பறக்க விட்டார். மார்கோ ஜான்சன் 3 ரன்களுக்கு அவுட் ஆனாலும், டேவிட் மில்லர் 59 ரன்களை குவித்து ஆட்டமிளக்காமல் இருந்தார். கடைசியாக களமிறங்கிய கேசவ் மகாராஜ் ஒரே ஒரு பந்தை மட்டும் ஆடி, ரன்கள் எடுக்காமல் அவுட் ஆகாமலும் களத்தில் நின்றார்.

18.5 ஓவரில் தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களை குவித்து, 4 விக்கெட் வித்தியாச்தில் நெதர்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. டேவிட் மில்லர் 4 சிக்ஸ்கள், 3 ஃபோர்களை விளாசினார். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஒரு சிக்ஸ் மற்றும் ஒரு ஃபோர் அடித்தார்.

நெதர்லாந்து தரப்பில், விவியன் கிங்மா மற்றும் லோகன் வான் பீக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். பாஸ் டி லீட்ஸ் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணியில் அதிக பவுன்டரிகளை அடித்து 59 ரன்களை குவித்து வெற்றிக்கு வித்திட்ட டேவிட் மில்லருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

பரபரப்பாக காணப்பட்ட இந்த போட்டியில், இரு அணிகளுமே விக்கெட்டுகளை எடுப்பதிலும், ரன்கள் எடுக்க விடாமல் தடுப்பதிலும் மும்முரம் காட்டியதால், பார்வையாளர்கள் சீட் எட்ஜில் அமர்ந்து வெற்றி யாருக்கு என்று தெரியாமல் குழம்பிப்போய் போட்டியை இறுதி வரை பார்த்து மகிழ்ந்தனர்.