Rashmika Mandana: விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: நூலிழையில் உயிர் தப்பிய ராஷ்மிகா: நடந்தது என்ன?

ராஷ்மிகா மந்தனா பயணித்த விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த போது திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட நிலையில், அவர் விமானத்தில் இருந்து பத்திரமாகத் திரும்பியுள்ளார்.

மும்பையில் இருந்து ஹைதராபாத்துக்கு விஸ்தாரா நிறுவன விமானத்தில் ராஷ்மிகா மந்தனா புறப்பட்டார். ராஷ்மிகாவுடன் நடிகை ஷ்ரத்தா தாசும் பயணித்ததாகக் கூறப்படுகிறது. இந்த விமானம் மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு நடுவானில் பறந்து கொண்டிருந்த போது,  திடீரென்று தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதை கவனித்த பைலட் உடனடியாக அலர்ட் ஆகி சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை உடனடியாக மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கினார். இதனால் விமானத்தில் பயணித்த நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, ஷ்ரத்தா தாஸ் உள்பட அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டபோது உயிர் தப்பித்தது எப்படி? என்பது குறித்து இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.

ராஷ்மிகா மந்தனா தானும் ஸ்ரத்தா தாஸூம் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். ராஷ்மிகா மந்தனா, ஷ்ரத்தா தாஸ் ஆகியோர் சிரித்தபடி உள்ள இந்தப் பதிவில், ‛‛உங்களின் தகவலுக்காக.. இப்படித்தான் நாங்கள் விமான விபத்தில் இருந்து உயிர் தப்பினோம்” என ராஷ்மிகா தெரிவித்துள்ளார். தான் விமான விபத்தில் சிக்க இருந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதை நினைத்து மகிழ்ச்சி அடையும் வகையில் ராஷ்மிகா இந்த இன்ஸ்டா ஸ்டோரியை பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையே ராஷ்மிகா மந்தனா பயணித்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறு குறித்து விஸ்தாரா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளதாவது: பிப்ரவரி 17ஆம் தேதி UK531 எனும் விஸ்தாரா விமானம் மும்பையில் இருந்து ஹைதராபாத்துக்கு புறப்பட்டது. சிறிது நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது. இதையடுத்து மீண்டும் விமானத்தை மும்பையில் தரையிறக்க முடிவு செய்யப்பட்டது.

மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.  விமானக் கோளாறு உடனடியாகக் கண்டறியப்படாததால்,  மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு வருந்துகிறோம். விஸ்தாராவைப் பொறுத்த வரையில் பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு  முக்கியமானது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க

Aishwarya Shankar: இயக்குநர் ஷங்கர் மகளுக்கு உதவி இயக்குநருடன் இரண்டாவது திருமணம்: வாழ்த்திய தங்கை அதிதி!

Siragadikka Aasai: சிட்டி வைத்த ட்விஸ்ட்.. காரை விற்ற முத்து – சிறகடிக்க ஆசை சீரியலின் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ!

Source link