Putin On Nuclear War: "அணு ஆயுதப்போர் வெடிக்கும்" உலக நாடுகளை மிரள வைத்த ரஷிய அதிபர் புதின்!

கடந்த 2022ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி, தொடங்கிய உக்ரைன் போர் இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.
உக்ரைன், ரஷ்யா நாடுகளுக்கு இடையே நடந்து வரும் போர், உலக நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. போரின் நடுவே, பெரும்பாலான நகரங்களில் இருந்து ரஷியா, தங்களின் படைகளை திரும்பப்பெற்றதாகவும் அது தொடர் பின்னடைவுகளை சந்தித்து வருவதாகவும் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.

தாக்கத்தை ஏற்படுத்தும் உக்ரைன் போர்:

போரில் உக்ரைனுக்கு தேவையான உதவிகளை அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் செய்து வருகிறது. அந்த வகையில், இந்த மாத தொடக்கத்தில் பேசிய பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், "வரும் காலங்களில் உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் துருப்புகள் அனுப்புவதை நிராகரித்து விட முடியாது" என்றார்.

உலக நாடுகள் மிரண்டு போகும் வகையில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், இதற்கு பதிலடி அளித்துள்ளார். உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் துருப்புகளை அனுப்பினால் உலகளாவிய அணு ஆயுத போர் வெடிக்கும் என எச்சரித்துள்ளார்.

ரஷியாவில் அடுத்த மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டு ஆண்டு உரை நிகழ்த்திய புதின், "உக்ரைனில் ரஷியாவின் லட்சியங்களை நிறைவேற்றுவேன் என உறுதி கூறுகிறேன். துருப்புகளை அனுப்பும் முடிவுகளை எடுக்கும் நாடுகள் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

உலக நாடுகளை மிரட்டும் ரஷிய அதிபர்:

ஐரோப்பியாவில் நேட்டோவின் கூட்டாளிகள் மீது ரஷியா தாக்குதல் நடத்த திட்டமிடுகிறது என குற்றஞ்சாட்டப்படுகிறது. ஆனால், எங்கள் எல்லையில் தாக்குதல் நடத்த மேற்கத்திய நாடுகள் இடங்களை தேர்வு செய்து வருகிறது. உக்ரைனுக்கு நேட்டோ துருப்புகளை அனுப்புவது குறித்து ஆலோசித்து வருகிறது" என்றார்.

ரஷியா மீது படையெடுக்க முயன்று தோல்வி அடைந்த பிரான்ஸ் பேரரசர் நெப்போலியன் மற்றும் ஜெர்மன் நாட்டின் சர்வாதிகாரி ஹிட்லர் குறித்து பேசிய புதின், "எங்கள் நாட்டு எல்லையில் துருப்புகளை அனுப்பியவர்களுக்கு என்ன நடந்தது என்பது நினைக்க தோன்றுகிறது. படையெடுக்க நினைப்பவர்களுக்கு அதை விட மோசமான விளைவுகள் ஏற்படும்.

தங்கள் பிராந்தியத்தில் உள்ள இலக்குகளைத் தாக்கக்கூடிய ஆயுதங்கள் எங்களிடம் உள்ளன என்பதையும், அவர்கள் இப்போது உலகை பயமுறுத்துவதும், அணுசக்தி மோதலின் உண்மையான அச்சுறுத்தலை எழுப்புவதும் நமது நாகரிகத்தை அழிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்" என்றார்.

அணு ஆயுத போர் வெடிக்கும் என ரஷிய அதிபர் புதின் கூறுவது இதுமுறை அல்ல. உக்ரைன் போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவது குறித்து அவர் பல முறை பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link