தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் காடுவெட்டி படத்தின் 2ஆம் நாள் வசூல் நிலவரம் பற்றி காணலாம்.
காடுவெட்டி படம்
தமிழ் சினிமாவில் அவ்வப்போது மறைந்த அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து படங்கள் எடுக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் மறைந்த காடுவெட்டி குரு. இவருக்கு வடமாவட்டங்களில் தனிப்பட்ட செல்வாக்கு என்பது உண்டு. இன்றைக்கும் குருவை தங்கள் வீட்டு தெய்வமாக வணங்கும் மக்கள் இருக்கவே செய்கிறார்கள். அப்படிப்பட்ட காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டுள்ளது.
மாவீரன் Entry! 🥰🔥#kaaduvetty pic.twitter.com/k3fAG0ZVXg
— பீட்டர் (@Peter_offl) March 16, 2024
காடுவெட்டி என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அவரது கேரக்டரில் தயாரிப்பாளரும் ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சங்கீர்த்தனா, விஷ்மியா, சுப்பிரமணிய சிவா, ஆடுகளம் முருகதாஸ், ஆதிரா, சுப்பிரமணியன் என பலரும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளனர். காடுவெட்டி படத்துக்கு வணக்கம் தமிழா சாதிக் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா பின்னணி இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லரே மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ரசிகர்களிடம் வரவேற்பு
காடுவெட்டி படம் சென்சார் போர்டில் 31 இடங்களில் கட் செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாமல் படத்தின் பல இடங்களில் வசனங்கள் மியூட் செய்யப்பட்டது. காடுவெட்டி என்ற டைட்டில் கூட சிக்கலில் மாட்ட, இயக்குநர் சோலை ஆறுமுகம் பல கட்ட முயற்சிகளுக்கு பிறகு அனுமதி பெற்றார். இதனிடையே தியேட்டரில் ரிலீசான காடுவெட்டி படம் அனைத்து தரப்பு மக்களும் பார்க்கக்கூடிய படமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதேசமயம் காடுவெட்டி படத்தில் நாடக காதல், அரசியல் சூழ்ச்சி உள்ளிட்ட பல விஷயங்களை பேசி கடும் விமர்சனங்களை காடுவெட்டி படம் சந்தித்து வருகிறது. மேலும் பள்ளி சிறுமியின் கையில் அரிவாளை கொடுத்து தன்னிடம் வம்பு செய்தவனை ஆர்.கே.சுரேஷ் வெட்டச் சொல்லும் காட்சிகள் மிகப்பெரிய அளவில் கண்டனங்களை பெற்றுள்ளது. இப்படியான நிலையில் காடுவெட்டி படத்தின் 2ஆம் நாள் வசூல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
இப்படம் முதல் நாளில் ரூ.17 லட்சம் வசூல் செய்துள்ளதாக sacnilk இணையதளம் தகவல் வெளியிட்டுள்ள நிலையில், இரண்டாம் நாளில் இப்படம் ரூ.9 லட்சம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: Kaaduvetti Movie Review: ஆர்.கே.சுரேஷின் காடுவெட்டி நடுநாட்டுக்கதை படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
மேலும் காண