தென் மாவட்ட வெள்ளம்:
அண்மையில் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்கள் கடும் சேதம் அடைந்தது. இதில், புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணியில் விளையாடும் தூத்துக்குடியைச் சேர்ந்த மாசானமுத்துவின் வீடு கனமழையில் இடிந்தது.
உதவி செய்வேன்:
இந்தநிலையில், ‘தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சீரமைக்க உதவுவேன்’ என தமிழ் தலைவாஸ் அணி வீரர் மாசானமுத்து லட்சுணன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், “எனது பெற்றோர் தற்போது கிராமத்தில் உள்ள பள்ளியில் தங்கியுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் அரசு தற்காலிக வீடுகளை உருவாக்கியுள்ளது. புதிய வீட்டைக் கட்டி முடிப்பதற்குள் நாங்கள் ஒரு குடிசையைக் கட்டப் போகிறோம்.
நன்கொடையாக வழங்க உள்ளேன்:
தூத்துக்குடியைச் சேர்ந்த வி விஸ்வந்த் மற்றும் நானும் எங்கள் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சீரமைக்க நிதி வழங்க உள்ளோம். கடந்த ஆண்டு புரோ கபடி லீக் ஏலத்தில் நான் சம்பாதித்த முழுத் தொகையையும் (ரூ 31.6 லட்சம்) நன்கொடையாக வழங்க உள்ளேன்.” கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய மாசானமுத்து, “தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எனது கிராமத்தில் ஆறாம் வகுப்பு படிக்கும் போது கபடி விளையாட ஆரம்பித்தேன். பதினொன்றாம் வகுப்பில் வேறு பள்ளிக்குச் சென்று அந்த பள்ளியில் இருந்த பயிற்சியாளர்களைக் கொண்டு எனது விளையாட்டை மேலும் மேம்படுத்தினேன். பள்ளிப்படிப்புக்குப் பிறகு எனது ஆட்டம் கொஞ்சம் மேம்பட்டது. அதிலும் நான் சென்னையில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தில் சேர்ந்தபோது எனது ஆட்டத்தை இன்னும் மேம்படுத்திக் கொண்டேன்.
என்னுடைய பெற்றோர்கள் என்னை கபடி வீரராக பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. ஏனெனில் இது காயம் ஏற்படக்கூடிய விளையாட்டு என்பதால் அரை மனதுடன் என்னை சென்னைக்கு அனுப்பினர். 18 வயதில் எனது கிராமத்திலிருந்து இந்திய விளையாட்டு ஆணையத்தின் விடுதிக்கு மாறினேன். தற்போது நான் விடுதியில் இருந்து வெளியேறி, சமீபத்தில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்துள்ளேன். நான் கபடி விளையாடாதபோது சென்னையில் வருமான வரித்துறையில் வரி உதவியாளராகப் பணிபுரிகிறேன்.” என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் படிக்க: Watch video: மெக்ராத்தின் குடும்ப பெண் உறுப்பினர்களுடன் கைகுலுக்க மறுத்த பாகிஸ்தான் வீரர்! வைரல் வீடியோ!
மேலும் படிக்க: T20I series: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடர்… ஹிட்மேன் ரோகித் சர்மா ரன் மிஷின் விராட் கோலிக்கு இடம்!
]]>