Popular cinematographer Manikandan’s 16 year old daughter vijay sister role in Goat movie


G.O.A.T Movie: பிரபல ஒளிப்பதிவாளர் மணிகண்டனின் 16 வயதான மகள் அபியுக்தா கோட் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.
கோட் படம்:
இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் நடிகர் விஜய் முதன்முறையாக கூட்டணி வைத்துள்ள திரைப்படம் கோட்(GOAT) தன் அரசியல் எண்ட்ரியை சமீபத்தில் அறிவித்த விஜய்யின் 68ஆவது திரைப்படமாக கோட் உருவாகி வருகிறது. அரசியல் வருகையால் சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்துள்ள நடிகர் விஜய்யின் கடைசி இரண்டு படங்களில் கோட் திரைப்படமும் ஒன்று என்பதால் இப்படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், பிரேம்ஜி, நடிகைகள் சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கோட் படத்தில் விஜய் இரண்டு விதமாக கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தெரிகிறது. 
விஜய் மகளாக நடிக்கும் பிரபலத்தின் 16 வயது மகள்:
அவ்வப்போது,  இந்த படம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், தற்போது இப்படத்தில் பிரபலம் ஒருவரின் மகள் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிறு வயதிலேயே அழுத்தமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் அனிகா சுரேந்திரன், சாரா, யுனி பார்த்தவி வரிசையில் தற்போது மற்றொரு பிரபலத்தின் வாரிசு நடிகையாக அறிமுகமாகியிருக்கிறார்.
அதன்படி, பிரபல ஒளிப்பதிவாளர் மணிகண்டனின் 16 வயதான மகள் அபியுக்தா கோட் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. கோட் படத்தில் விஜய்யின் மகளாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர், பரதநாட்டிய நடனக் கலைஞர் மற்றும் மாடலாக இருக்கிறார்.   

முன்னதாக, கோட் படத்தில் விஜய்யிக்கு மகளாக நடிக்க இவானாவை தேர்வு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், தற்போது நடிகையாக நடித்து வருவதால், அவர் விஜய்க்கு மகளாக நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், விஜய்க்கு மகளாக நடிக்க பிரபல ஒளிப்பதிவாளர் மணிகண்டனின் 16 வயதான மகள் அபியுக்தா கமிட் ஆகி இருப்பதாக சமூக வலைதளங்களில் சொல்லப்பட்டு வருகிறது. இதனால், அபியுக்தா யார் என்று ரசிகர்கள் இணையத்தில் தேடி வருகின்றனர். 

மேலும் படிக்க
Raayan: வட சென்னையில் வசிக்கும் சகோதரர்களின் கதை: தனுஷின் ராயன் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!
Blue Star Ott Release: ஓடிடிக்கு ரெடியான அசோக் செல்வனின் ப்ளூ ஸ்டார்! எந்தத் தேதி, எந்தத் தளம் தெரியுமா?

மேலும் காண

Source link