Pongal 2024 1090 Special Buses On The Occasion Of Pongal Festival Villupuram Government Transport Corporation – TNN | பொங்கல் விழாவை முன்னிட்டு 1090 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

விழுப்புரம்: பொங்கல் விழாவை முன்னிட்டு 1090 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பொங்கல் 2024 பண்டிகை மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களில் பயணிகள் அதிக அளவில் புழக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் வருகிற 12.01.2024. 13.01.2024 மற்றும் 14.01.2024 ஆகிய நாள்களில் சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் அமைக்கப்பட உள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து பிற ஊர்களுக்கு செல்ல ஏதுவாக விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக கூடுதலாக 12.01.2024 அன்று 539 சிறப்பு பேருந்துகள் 13.01.2024 மற்றும் 14.01.2024 அன்று 1090 சிறப்பு பேருந்துகள் திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, விருத்தாச்சலம், திருவண்ணாமலை, போளூர், ஓசூர், வேலூர், ஆரணி, திருப்பத்தூர் மற்றும் புதுச்சேரி ஆகிய ஊர்களுக்கு இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பயணிகள் சிதம்பரம், தர்மபுரி, ஓசூர், நெய்வேலி, புதுச்சேரி, சேலம், திருவண்ணாமலை, திருச்சி, வேலூர் ஆகிய ஊர்களுக்கு செல்ல https://www.tnstc.in/home.html என்ற இனையத்தில் முன் பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், பயணிகள் அடர்வு குறையும் வரை தேவைக்கு ஏற்ப பேருந்துகளை இயக்கிடவும், பேருந்து இயக்கத்தினை மேற்பார்வை செய்திடவும் அதிகாரிகள் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர், இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் 
தமிழக போக்குவரத்து கழகத்தில் பணிபுரியக்கூடிய போக்குவரத்து தொழிலாளர்கள் பஞ்சப்படி வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும், சம்பள உயர்வு வழங்கவேண்டும் என்பன 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று இரண்டாவது நாளாக  வேலை நிறுத்தபோராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Source link