PM ModI Rameshwaram: பிரதமர் மோடியின் வருகையையொட்டி, ராமேஸ்வரத்தில் கடும் கட்டுப்பாடுகளுடன், பலத்த பாதுககாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
பிரதமர் மோடி தமிழகம் வருகை:
தமிழகத்திற்கான 3 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று சென்னை வந்தடைந்தார். தொடர்ந்து, ஆளுநர் ரவி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோருடன் சேர்ந்து, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இதையடுத்து, ஆளுநர் மாளிகையில் இரவு தங்கியிருந்து ஓய்வு எடுத்தார். இந்நிலையில், பயணத்தின் இரண்டாவது நாளான இன்று திருச்சிக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு ஸ்ரீரங்கத்தில் உள்ள பிரபல ரங்கநாதசுவாமி ஆலயத்தில் வழிபாடு நடத்த உள்ளார். தொடர்ந்து பிற்பகலில் ராமேஸ்வரம் புறப்பட்டு சென்று நாளை வரை ஆன்மிக்க செயல்பாடுகளில் ஈடுபட உள்ளார்.
பிரதமர் மோடியின் ராமேஸ்வர பயண திட்டம்:
திருச்சி பயணம் முடிந்தவுடன் அங்கிருந்து பிரதமர் மோடி, ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் செல்கிறார்
அங்கிருந்து ராமநாதசுவாமி கோவிலுக்கு தரை மார்க்கமாக செல்கிறார்.
அங்கு அக்னி தீர்த்தம் மற்றும் ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி சிறப்பு பூஜை செய்து ராமநாதசுவாமியை வழிபாடு செய்கிறார்.
தொடர்ந்து ராமேஸ்வரத்தில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் இரவு தங்குகிறார்.
இதையடுத்து நாளை காலை மீண்டும் ராமேஸ்வரத்தில் சுவாமி தரிசனம் செய்து விட்டு, தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு சென்று புனித நீராடுகிறார்
அந்த வழியில் உள்ள கோதண்டராமர் கோயிலுக்கு காரில் சென்று தரிசனம் செய்கிறார்.
இறுதியாக கலசத்தில் சேகரித்த 22 புனித தீர்த்தத்தை எடுத்துக் கொண்டு ராமேஸ்வரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் மதுரை வரும் மோடி, அங்கிருந்து விமானத்தில் டில்லி செல்கிறார்.
கட்டுப்பாடுகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும்:
பிரதமரின் வருகையினை முன்னிட்டு ராமேஸ்வரம் தீவு மற்றும் ராமநாதசுவாமி கோயில், பிரதமர் தங்க உள்ள ராமகிருஷ்ண மடம் ஆகியவை சிறப்பு பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. அதோடு, பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
பிரதமர் மோடியின் வருகையையொட்டி நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை ராமநாதபுரம் – ராமேஸ்வரம் இடையே போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
நண்பகல் 12 மணி முதல் நாளை நண்பகல் 12 மணி வரை தனுஷ்கோடிக்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
இன்றும், நாளையும் ராமேஸ்வரத்திற்குள் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இரு நாட்களிலும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை ராமநாதசுவாமி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மேற்குறுஇப்பிட்ட நேரத்தில் பக்தர்கள் தரிசனத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
பிரதமர் மோடி செல்லும் இடங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
3400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்
தங்கும் விடுதிகள், ரயில் மற்றும் பேருந்து நிலையம் போன்ற இடங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுவதோடு, இலங்கைத் தமிழர் மறு வாழ்வு மையத்தில் தங்கியுள்ளவர்கள் விவரங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன
ராமேஸ்வரம் மற்றும் தீவு பகுதி முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பு வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது
ட்ரோன் போன்றவை பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.