PM Modi TN Visit: மீண்டும் மீண்டுமா..! மார்ச் 22ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி


PM Modi TN Visit:  நாடாளுமன்ற தேர்தல் தேதி நெருங்கி வரும் சூழலில், பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் 22ம் தேதி தமிழகம் வந்து, தென்மாவட்டங்களில் பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 4ம் தேதி தான் சென்னையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அதன்படி, நடப்பாண்டில் 3 மாதங்களில் 5வது முறையாக பிரதமர் மோடி தமிழகம் வர இருக்கிறார். தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அடுத்தடுத்து பிரதமர் மோடி தமிழ்நாடு வருவது, பாஜக தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதோடு, இந்த தேர்தலில் எப்படியும் தமிழ்நாட்டில் இருந்து பாஜகவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றிட அக்கட்சி மிகுந்த தீவிரம் காட்டுவதையும், பிரதமர் மோடியின் வருகை உணர்த்துகிறது.

மேலும் காண

Source link