PM Modi:பா.ஜ.க. அரசின் தாரக மந்திரம் என்ன? மக்களவையில் பிரதமர் மோடி விளக்கம்!


சீர்த்திருத்தம், செயலாக்கம், மீட்டுருவாக்கம் ஆகிய மூன்றும் எங்களது தாரக மந்திரமாக இருந்து வருகிறது என மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 
அயோத்தி ராமர் கோயில் திறப்பை பாராட்டி நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ராமர் கோயில் தீர்மனத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார். அதில் உலகையே அச்சுறுத்திய கொரோனா பெருந்தொற்று காலத்தில் கூட நாட்டின் வளர்ச்சி பாதிக்கவில்லை;புதிய நாடாளுமன்றத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களவையில் நரேந்திர மோடி உரையின் முக்கியம்சங்கள்

100%  முழு அர்ப்பணிப்புடன் மக்களுக்கு சேவை செய்ய உறுதி ஏற்றுள்ளோம்.
தீவிரவாதம் மிகப்பெரிய சவாலாக இருந்தது.அதனால் ஏராளமனோர் பாதிக்கப்பட்டனர்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது.
 

 

மேலும் காண

Source link