மலையாள நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி இருவரும் ஒருவருக்கொருவர் முத்தம் கொடுத்து அன்பை வெளிப்படுத்திய வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த இருவர் மோகன் லால் – மம்முட்டி. கேரளாவின் கொச்சி நகரில் சமீபத்தில் நடந்த விருது விழாவில் மோகன்லால், மம்முட்டி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மோகன்லால், ஜவான் படத்தில் அனிருத் இசையில் வெளியான ஷாருக்கானின் “ஜிந்தா பந்தா” மற்றும் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற “ஹுக்கும்” ஆகிய இரண்டுக்கும் நடனமாடினார். இது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
Big M’s of Mollywood 💎❤️@Mohanlal @mammukka pic.twitter.com/4NT80oErLS
— Ajay Lalettan (@Ajay2255_) April 23, 2024
இந்நிகழ்ச்சியில், திரைப்பட தயாரிப்பாளர் ஜோஷிக்கு விருது வழங்க இருவரும் ஒன்றாக மேடைக்கு வந்தனர். மம்முட்டி மேடையேறி வந்தவுடன் மோகன்லால் கன்னத்தில் முத்தமிடுவார். உடனே, மோகன்லாலும் மம்முட்டிக்கு கன்னத்தில் முத்தமிடுவார். இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. மலையாள சினிமாவில் இருவரும் பிரபல நடிகர்களாக இருந்தாலும் இருவருக்குள்ளும் இருக்கும் நட்புறவும் பாசமும் மிகவும் அழகாக இருப்பதாக ரசிகர்கள் இந்த வீடியோவை கொண்டாடி வருகின்றனர். இருவரும் அன்பை வெளிப்படுத்திய விதம் அனைவரிடமும் பாராட்டுகளை பெற்று வருகிறது.
ஷாருக்கான் – மோகன்லால் அன்பு உரையாடல்
ஜவான் பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் பர்ஃபாமன்ஸ் மிகவும் நன்றாக இருந்ததாக பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் பாராட்டியுள்ளார். இந்த வீடியோ தொடர்பாக அவர் எக்ஸ் தள பதிவில் “ இந்தப் பாடலை எனக்கு மிகவும் சிறப்பானதாக மாற்றியதற்கு நன்றி மோகன்லால். லவ் யூ.நீங்க தான் ஒர்ஜினல் ஜிந்தா பந்தா“ என்று குறிப்பிட்டுள்ளார். அதோடு, மோகன்லாலுடன் இரவு உணவு சாப்பிட விரும்புவதாகவும் ஷாருக் கான் தெரிவித்திருக்கிறார்.
Thank u @Mohanlal sir for making this song the most special for me now. Wish I had done it half as good as you. Love u sir and waiting for dinner at home as and when. You are the OG Zinda Banda!!! https://t.co/0NezClMavx
— Shah Rukh Khan (@iamsrk) April 23, 2024
இதற்கு மோகன் லால் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ல பதிலில்.” டியர், ஷாருக். உங்களைப்போல யாராலும் பர்ஃபார்ம் செய்ய முடியாது. நீங்கதான் எப்போதும் ‘OG Zinda Banda ‘. உங்களின் க்ளாசிக் ஸ்டைலில்.” என்று குறிப்பிட்டு இரவு உணவு மட்டும் ’Zinda Banda’ ஸ்டைலில் காலை உணவும் சாப்பிடுவோம் என்று பதிவிட்டுள்ளார்.
பாலிவுட் – மலையாள சினிமா பிரபலங்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் விதத்தை கண்டு ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் அந்த போஸ்ட்களை பகிர்ந்து வருகின்றனர். பலரும் வீடியோ ரொம்பவும் க்யூட்டாக இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
Dear @iamsrk, nobody can do it like you! You are and always will be the OG Zinda Banda in your classic, inimitable style. Thanks for your kind words. Also, just dinner? Why not groove to some Zinda Banda over breakfast, too? https://t.co/0OCZD4VPoH
— Mohanlal (@Mohanlal) April 23, 2024
மீண்டும் ஒன்றாக நடிக்கும் மோகன்லால் – ஷோபனா
மலையாளத்தில் திரையில் ரசிகர்கள் அதிகம் பார்த்த ஜோடிகளில் ஒன்று மோகன்லால் மற்றும் ஷோபனா. இருவரும் இணைந்து 55 படங்களில் இணைந்து நடித்துள்ளார்கள். எந்தெந்த மாதரம் (1986) , அபயம் தேடி (1986) , வெள்ளனகளுடே நாடு (1988), உள்ளடக்கம் (1991), மாயா மாயூரம் (1993), மணிச்சித்திரதாழு (1993) , மின்னாரம் (1994), நாடோடிகட்டு (1987) ஆகிய திரைப்படங்கள் இருவர் கூட்டணியில் வெளியான சூப்பர்ஹிட் படங்கள்.
மோகன்லாலின் 360ஆவது படத்தில் நடிகை ஷோபனாவுடன் இணைந்து நடிக்கிறார் என்பதும் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் காண