663 நாட்களுக்கு பின்னார் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விலை குறைப்பை அடுத்து சென்னையில், பெட்ரோல் லிட்டருக்கு 100.75-ஆக விற்பனையாகும். டீசல், விலை குறைப்புக்கு பின், ரூ.92.34-ஆக விற்பனையாகும்.
Petrol and Diesel prices reduced by Rs 2 per litre pic.twitter.com/r3ObRkKyBX
— ANI (@ANI) March 14, 2024
நள்ளிரவு முதல் விலை குறைப்பு அமல்:
மத்தியில் பா.ஜ.க. ஆட்சி கடந்த 2014ம் ஆண்டு அமைந்தது முதலே பெட்ரோல், டீசல் விலை மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியது. பெட்ரோல், டீசல் விலை தினசரி விலை நிர்ணய முறையை பா.ஜ.க. அரசு அறிமுகப்படுத்தியது. இந்த முறைக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலே சென்றது. பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 100-ஐ கடந்தது இருசக்கர வாகன ஓட்டிகள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் உயர்ந்தது. இந்த சூழலில், கடந்த 663 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாமலே இருந்தது. இந்த சூழலில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைத்து மத்திய அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் புரி அறிவித்துள்ளார். இதன்படி, பெட்ரோல் ரூபாய் 102.75க்கு விற்பனையாகி வந்த நிலையில், இன்று நள்ளிரவு முதல் ரூபாய் 100.75க்கு விற்பனையாக உள்ளது.
நெருங்கும் மக்களவைத் தேர்தல்:
டீசல் விலை ரூபாய் 2 குறைக்கப்பட்டுள்ளது. இதனால், ரூபாய் 94.34க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த டீசல் விலை இன்று நள்ளிரவு முதல் ரூபாய் 92.34க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. மத்திய அரசு மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்று திடீரென மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைத்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை தேர்தலை கருத்தில் கொண்டே எடுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு, மத்திய அரசு சமையல் சிலிண்டர் விலையில் ரூபாய் 100 குறைத்து உத்தரவிட்டிருந்தது. இதனால், சிலிண்டர் தற்போது ரூபாய் 818க்கு விற்கப்பட்டு வருகிறது. தற்போது பெட்ரோல், டீசல் விலையையும் மத்திய அரசு குறைத்துள்ளது.
மேலும் படிக்க: Khushbu Sundar – BJP : கற்பு, சேரி, பிச்சை… குஷ்புவை சுற்றிச்சுழலும் சர்ச்சைப் பேச்சுக்கள்.. ஒரு ரிவைண்ட்!
மேலும் படிக்க: Mamata Banerjee: நெற்றியில் பலத்த காயத்துடன் மம்தா பானர்ஜி அனுமதி! என்ன நடந்தது?
மேலும் காண