Pakistan Cricket: வாரியத்துடன் மீண்டும் புகைச்சல்.. சர்வதேச கிரிக்கெட்டை விட்டு வெளியேறும் பாகிஸ்தான் வீரர்கள்..!

2023 ஒருநாள் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை. அதை தொடர்ந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கும், அணிக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லை.

உலகமே உற்றுபார்க்கும் உலகக் கோப்பை போட்டியில் லீக் போட்டிகளுடன் பாகிஸ்தான் அணி வெளியேற்றப்பட்டதால், பாபர் அசாம் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதே நேரத்தில் அப்போது பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர்கள் மற்றும் இயக்குனர்களும் அடுத்தடுத்து தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இந்தநிலையில், தற்போது மற்றொரு விஷயம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பூதாகரமாக வெடித்துள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இருந்து பல அனுபவமிக்க வீரர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் உடனான மத்திய ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாட்டு லீக் போட்டிகளில் விளையாட வீரர்களுக்கு என்.ஓ.சி ( நோ ஆப்ஜெக்ஷன் சர்டிபிகேட்) வழங்க வாரியம் மறுத்ததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதில், சில வீரர்கள் தேசிய அணியில் விளையாடாத நிலையிலும், வெளிநாட்டு டி20 லீக்களில் விளையாட அனுமதிக்கப்படாததால், வாரியத்தின் மீது கோபமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

யார் அந்த வீரர்கள்..?

வங்கதேச பிரீமியர் லீக்கில் விளையாடுவதற்கு ஜமான் கான், ஃபகார் ஜமான் மற்றும் முகமது ஹரி உள்ளிட்ட சில வீரர்களுக்கு NOC வழங்க வாரியம் மறுத்துள்ளது. தற்போதைய பிசிபி தலைவரான ஜகா அஷ்ரஃப் காலத்தில் முடிவு செய்யப்பட்ட தற்போதைய கொள்கையின்படி, மத்திய ஒப்பந்த வீரர்கள் பிஎஸ்எல் தவிர இரண்டு வெளிநாட்டு டி20 லீக்குகளில் விளையாட அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி,பாகிஸ்தான் தேசிய அணியில் விளையாடாத வீரர்கள் வெளிநாடுகளில் நடைபெறும் லீக்களில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கபடாதது ஏன் என்று கேள்விகள் எழுந்துள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் தொடரும் மாற்றங்கள்:

2023 ஒருநாள் உலகக் கோப்பையில் அணியின் மோசமான செயல்பாடுகள் காரணமாக பாபர் அசாம் கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதனை தொடர்ந்து தலைமை பயிற்சியாளர், பேட்டிங் பயிற்சியாளர், பந்துவீச்சு பயிற்சியாளர் மற்றும் அணி இயக்குனர் பதவிகளும் மாற்றப்பட்டது. இதன்பின், சமீபத்தில் ஓய்வுபெற்ற முகமது ஹபீஸ் இயக்குனர் மற்றும் பயிற்சியாளராகவும், வஹாப் ரியாஸ் தலைமை தேர்வாளராகவும் நியமிக்கப்பட்டனர்.

பாகிஸ்தானின் டெஸ்ட் மற்றும் டி20 அணிக்கு தனித்தனி கேப்டன்கள்:

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு, இரண்டு புதிய கேப்டன்கள் நியமிக்கப்பட்டனர். ஷான் மசூத் டெஸ்ட் கேப்டனாகவும், ஷஹீன் ஷா அப்ரிடி டி20 கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். ஷான் மசூத் தனது தலைமையிலான டெஸ்ட் போட்டியில் இன்னும் ஒரு வெற்றியை கூட பெறவில்லை. அதேபோல், டி20 கேப்டனாக ஷஹீன் ஷா அப்ரிடி நியூசிலாந்துக்கு எதிராக தொடர்ந்து நான்கு டி20 போட்டிகளில் தோல்வியடைந்து, அதன்பின் ஒரு வெற்றியை பாகிஸ்தான் அணிக்காக பெற்று தந்தார். இப்படியான சூழ்நிலையில், தலா ஒருமுறை ஒருநாள் மற்றும் டி20 உலகக் கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணிக்கு இப்படி ஒரு நிலை வரும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.

Source link