NIA Raid: தமிழ்நாடு முழுவதும் காலையிலேயே அதிரடி.. நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ சோதனை..


<p>இன்று காலை முதல் தமிழ்நாடு முழுவதும் என்.ஐ.ஏ அதிகாரிகள் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கோவையில் இரண்டு இடங்கள், சென்னை, திருச்சி, சிவகங்கை, தென்காசியில் தலா ஓர் இடம் என என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் சண்முகா நகரில் இருக்கும் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வெளிநாட்டில் இருந்து பணம் பெற்றது தொடர்பாகவும் சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p>
<p>அதேபோல் சிவகங்கையில் தென்னகம் என்ற யூடியூப் சேனல் நடத்தி வரும் நாம் தமிழர் கட்சி நிர்வாகி விஷ்ணு பிரதாப் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. வெளிநாட்டில் இருந்து நிதி பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தென்காசியில் சிவகிரி பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் இசை மதிவாணன் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கோவை ஆலந்துறை ஆர்.ஜி&nbsp; நகரில் உள்ள நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி ரஞ்சித் குமார் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.&nbsp;</p>
<p>இப்படி தமிழ்நாடு முழுவதும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது ஒரு புறம் இருக்க நாம் தமிழர் கட்சி நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக்கை ஆஜராக என்.ஐ.ஏ அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். இன்று காலை சென்னையில் இருக்கும் என்.ஐ.ஏ அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அவர் வெளியூரில் இருப்பதால் வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி ஆஜராக இருப்பதாக பதிலளித்துள்ளார்.&nbsp;</p>

Source link