Nadhaswaram serial Kamu character drank 5 litre mentos water and suffered in loose motion for next 5 years


சின்னத்திரை ரசிகர்களின் என்றுமே ஃபேவரட்டான சேனல் என்றால் அது நிச்சயம் சன் டிவி தான். அதில் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் ப்ரெஷாகவே இருக்கும். அப்படி பட்ட ஒரு ஆல் டைம் ஃபேவரட் சீரியல் தான் ‘நாதஸ்வரம்’. 2010ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை ஒளிபரப்பான மெகா சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்தது. இயக்குநர் திருமுருகன் இயக்கி நடித்த இந்த சீரியல் அண்ணன் தங்கைகளின் பாசத்தை மையமாக வைத்து ஒளிபரப்பானது.
ஃபேமிலி ஆடியன்ஸை வெகுவாக கவர்ந்த ‘நாதஸ்வரம்’ சீரியலில் சந்திரமௌலி, பூவிலங்கு மோகன், ஸ்ரித்திகா, ஜெயந்தி நாராயணன், தேனீ சத்தியபாமா, ரேவதி தாமோதரன், ஜெயஸ்ரீ, சங்கவி, சிந்து, சுதா பிரகாஷ், ஸ்ருதி ஷண்முக பிரியா மற்றும் பலர் நடித்திருந்தனர். 

நாதஸ்வரம் சீரியலில் நடித்த நடிகர் நடிகைகள் பலர் மிகவும் பிரபலமாகி அடுத்தடுத்த ப்ராஜெக்ட்களில் கமிட்டாகி நடித்து வந்தனர். அந்த வகையில் 9 ஆண்டுகளுக்கு பிறகு நாதஸ்வரம் சகோதரிகளின் ரீயூனியன் ஒன்று சமீபத்தில் நடைபெற்றது. அப்போது பல நினைவுகளை சகோதரிகள் பகிர்ந்து கொண்டார்கள். 
அப்போது காமேஸ்வரி என்ற கேரக்டரில் நடித்த பென்சி பாங்க்லின் எந்த அளவுக்கு டெடிகேஷனுடன் நடித்து இருந்தார் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் நிகழ்வு ஒன்றை பற்றி பகிர்ந்து இருந்தனர். 
காமு ஒரு காட்சியில் மண்ணெண்ணெய் குடிப்பதுபோல அமைக்கப்பட்டு இருந்தது. அந்த காட்சிக்காக 5 லிட்டர் கேன் முழுவதிலும் தண்ணீரை நிரப்பி அதன் கலர் ப்ளூவாக மாறும் வரையில் மெண்டாஸ் போட்டு கலக்கி வைத்து இருந்தார்கள். அந்த சீனுக்காக ஏதோ கொஞ்சம் குடிப்பாங்கன்னு எதிர்பார்த்தா மொத்த கேன் தண்ணீரையும் குடிச்சுட்டாங்க. அதுக்கு அப்புறம் ஒரு வாரம் பாத்ரூமுக்கும் ஷாட்டுக்கும் தான் மாறி மாறி திரிஞ்சுக்கிட்டு இருந்தாங்க. ஐந்து வருஷம் வரைக்கும் லூஸ் மோஷன்தான். அந்த அளவுக்கு டெடிகேஷனோடு நடித்து இருந்தாங்க என மற்ற சகோதரிகள் கூறி இருந்தார்கள். 
 

இது குறித்து காமு பேசும் போது “முதல் முறையா நம்ம நடிக்குறோம். நம்மளை நம்பி ஒரு பெரிய சீன் கொடுக்குறாங்க. சார் வாயில இருந்து  இந்த பொண்ணு நல்லா நடிச்சுருச்சு பா அப்படின்னு பேர் வாங்கணும் என்று ஆசைப்பட்டேன். நைட் 2 மணிக்கு அந்த சீன் ஷூட் பண்ணாங்க. உன்னால எவ்வளவு முடியுமோ குடிமான்னு சார் சொன்னார். அவரும் கட் சொல்லல அதனால நானும் ஃபுல்லா குடிச்சுட்டேன். ஹால்ஸ் மாத்திரை சாப்பிட்ட எப்படி சில்லுன்னு இருக்கும். அப்படி தான் இருந்துது. அப்பா எனக்கு ஒன்னும் தெரியல. ஆனா அதுக்கு அப்புறம் என்ன சாப்பிட்டாலும் உடனே வெளியே வந்துடுச்சு” என்றார்

மேலும் காண

Source link