<p>இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் வெளியிட்டுள்ள ‘மிகவும் சக்திவாய்ந்த இந்தியர்கள் 2024’ பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார். </p>
<p>இந்த பட்டியலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 16 வது இடத்திலும், ஆம் ஆத்மி கட்சியின் (AAP) தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் 18 வது இடத்திலும் உள்ளார். அந்த பட்டியலில் 2வது இடத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 3வது இடத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், 4வது இடத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், 5வது இடத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். </p>
<p>இதேபோல் 6வது இடத்தில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 7வது இடத்திலும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 8வது இடத்திலும், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா 9வது இடத்திலும், தொழிலதிபர் கௌதம் அதானி 10வது இடத்திலும் உள்ளனர். </p>