Mohammed Shami Arjuna Award Netizens Tagets Shami Ex Wife Hasin Jahan | Mohammed Shami: அர்ஜூனா விருது! முன்னாள் மனைவிக்கு முகமது ஷமி கொடுத்த பதிலடி

அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர்:
கடந்த 2023 ஆம் ஆண்டு இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது ஒரு நாள் உலகக் கோப்பை தொடர். இந்த உலகக் கோப்பையில் பல்வேறு விதமான சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. அதேபோல், உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து கோப்பையை தவறவிட்டிருந்தாலும், இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய வீரர்கள் ஒவ்வொருவரும் கொண்டாடப்பட்டனர்.
அந்த வகையில் இந்த முறை நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இந்திய ரசிகர்களால் அதிகம் உச்சரிக்கப்பட்ட ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி பெயர்களுக்கு இணையாக உச்சரிக்கப்பட்ட இன்னொரு பெயர் முகமது ஷமி. ஆம், முகமது ஷமியின் செயல்பாடுகள் நாம் சொல்லி தெரியவேண்டியதில்லை.
சரமாரி குற்றச்சாட்டுக்கு ஆளான ஷமி:
2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியது அதில் முக்கியமானது. முன்னதாக, முகமது ஷமி தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையால் கிரிக்கெட்டையே இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். தான் பாசத்துடன் நேசித்து வந்த மனைவி திடீரென்று ஷமியிடம் விவாகரத்து கேட்டார். அது மட்டுமல்லாமல் ஷமியின் சொத்தில் பலவற்றை தமக்கு பிரித்து வழங்க வேண்டும் என்று கூறினார். அத்துடன் நிற்காமல் ஷமி போலீசாரிடம் புகார் கொடுத்தார். அதில், ஷமி பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதாககவும் தன்னை கொலை செய்ய முயற்சி செய்வதாகவும் தெரிவித்தார்.
மேலும் தன்னுடைய குழந்தையை ஷமியிடம் வழங்க மாட்டேன் என்றும் கூறினார். இதனால் முகமது ஷமி வாழ்க்கையின் மீதான நம்பிக்கையே இழந்து தடுமாறி நின்றார். அந்த நேரத்தில் தான் இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரியின் அறிவுரையை கேட்டு மீண்டும் தன்னுடைய திறமையை கிரிக்கெட்டில் காட்டினார்.
அர்ஜூனா விருது:
இந்நிலையில் தான் உலகக் கோப்பை தொடரின் போது தனக்கு கிடைத்த வாய்ப்பை மிக சிறப்பாக பயன்படுத்தினார். இதில் கவனிக்க வேண்டியது முகமது ஷமிக்கு கிடைத்த வாய்ப்பு தான். நியூசிலாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியின் போது ஹர்திக் பாண்டியாவிற்கு ஏற்பட்ட கணுக்கல் காயம் காரணமாக தான் ஷமிக்கு இந்திய அணியில் இடம் கிடைத்தது. இதில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் அவரை சிறப்பிக்கும் விதமாக அவருக்கு விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான அர்ஜூனா விருது வழங்குவதாக இந்திய அரசு கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி அறிவித்தது.
முன்னாள் மனைவிக்கு ஷமியின் பதிலடி:
அதன்படி, ஜனவரி 9 ஆம் தேதி முகமது ஷமி குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு கையால் அர்ஜூனா விருதை பெற்றார். விருதுவாங்கிய கையோடு தன்னுடைய தாயாரை பார்த்து அவரிடம் விருதை காண்பித்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. அதிலும், குறிப்பாக எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இன்றி தான் உயிராய் நேசித்த மனைவி தன் மீது சொன்ன குற்றச்சாட்டுகள் எல்லாம் பொய் என நீதிமன்றத்தில் நிரூபித்து, அதன் பின் இந்திய அணியில் இடம் பிடித்து இன்றைக்கு கிரிக்கெட் வீரர்களுக்கு இந்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருதான அர்ஜூனா விருது வாங்கியதை, தன் முன்னாள் மனைவிக்கு தன் திறமையால் ஷமி கொடுத்த பதிலடி என்பது போன்ற பதிவுகளை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
அதோடு தங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் அதையெல்லாம் கடந்து தங்களின் திறமையின் மூலம் முன்னேற வேண்டும் என்பவர்களுக்கு முகமது ஷமியின் வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டு என்றும் ஷமியை கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள்.
மேலும் படிக்க: Tamil Thalaivas Vs Puneri Paltan LIVE: வெற்றிக்காக தொடரும் தமிழ் தலைவாஸின் போராட்டம் மீண்டும் வீண்; புனேரி வெற்றி
 
மேலும் படிக்க: Thalaivas vs Gujarat Giants LIVE: போராட்டத்தின் உச்சகட்டம்; போராடி வீழ்ந்த தமிழ் தலைவாஸ்; குஜராத் வெற்றி
 
 
 

Source link