Minister Sivashankar Inspects Villupuram New Bus Station

போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளதாகவும் பொங்கல் பண்டிகை வரை வேலை நிறுத்தம் தொடர்ந்தாலும் அறிவிக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமெனவும் தேவைக்கேற்ப தற்காலிக ஓட்டுனர்களை கொண்டு பேருந்துகளை இயக்குவோம் எனவும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் போக்குவரத்து  தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்து இயக்கம் குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு செய்து பயணிகளிடம் போதிய அளவு பேருந்துகள் இருக்கப்படுகிறதா என கேட்டறிந்தார்.
அதனை தொடர்ந்து தொடர்ந்து பேட்டியளித்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டாலும் பேருந்துகள் இயல்பு நிலையிலையே தமிழகம் முழுவதும் இயக்கப்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் எதிர்பார்த்து வந்த பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், தொழிலாளர்கள் பொங்கல் வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தாலும், மக்கள் பாதிக்காத வகையில் பேருந்துகள் இயக்க முதலமைச்சர் உத்தரவிட்டதின் பேரில் பேருந்துகள்  இயக்க தேவையான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் பேசியவர், போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த  எப்பொழுதும் அரசு தயாராக உள்ளதாகவும், போக்குவரத்து துறையிலுள்ள காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்புவதற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் கோரப்பட்டு நேர்காணல் நடைபெற்று கொண்டு இருப்பதாகவும் இதற்கான அறிவிப்புகள் பத்திரிக்கையில் வெளியிடப்பட்டு அறிவிப்புகள் கொடுக்கப்பட்டது, அவர்களுக்கு தெரிந்தும் ஏன் இதனை அறிந்தும் அவர்கள் தெரிவிக்கிறார்கள் என தெரியவில்லை என்று கூறினார்.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு திமுக ஆட்சியில் 5 சதவிகித ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அதிமுக ஆட்சியில் 14 ஊதிய ஒப்பந்தம் பேசி முடிக்கவில்லை என்றும் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் 20 சதவிகிதம் போனஸ் வழங்கப்பட்டது, அதிமுக ஆட்சியில் 8 சதவிகிதம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது குறித்து எடப்பாடி பழனிசாமி வாய்திறக்கவில்லை என தெரிவித்தார்.
போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் செய்யாமலேயே 20 சதவிகிதம் போனஸை தமிழக முதலமைச்சர் வழங்கி உள்ள நிலையில் இவர்களின் கோரிக்கையையும் முதல்வர் நிறைவேற்றி தருவார் என்றும் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றி தரமாட்டோம் என்று கூறவில்லை, அதற்கான கால அவகாசம் கொடுக்க வேண்டுமென்றுதான் கேட்பதாகவும் மக்கள் விரோத தொழிலாளர் நல விரோத அரசாக திமுக அரசு இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு சென்னையிலிருந்து சொந்த ஊர்களில் சென்று கொண்டாட எந்த இடையூறும் இல்லாமல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமென்றும் அதிமுக ஆட்சியில் கருணை அடிப்படையில் பணிகள் வழங்கப்படாத நிலையில் திமுக ஆட்சியில் 800 பேருக்கு கருணை அடிப்படையில் பணிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், நிதி நிலைமை சரியான பிறகு போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றி தருகிறோம் என்று அரசு கூறிய பின்பும் அவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தொழிலாளர்கள் பணிக்கு வராத இடத்தில் தற்காலிக ஓட்டுனர்களை கொண்டு பேருந்துகளை இயக்கும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார். 
Bus Strike: விழுப்புரம் கோட்டத்திற்கு உட்பட்ட 6 மண்டலங்களில் 3054 புறநகர், 758 கிராமப்புற பேருந்துகள் இயக்கம்

Source link