விழுப்புரம்: மத்திய அரசின் பட்ஜெட்டில் சுதந்திரம் இல்லை என்றும் தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கவில்லை, ரயில்வே துறையில் சொகுசு பெட்டிகளை இணைப்பதாக கூறுவதன் மூலம் சாதாரண ஏழை எளிய மக்கள் வஞ்சிக்கும் வகையில் ஒன்றிய அரசின் பட்ஜெட் இருப்பதாகவும் பணம் படைத்தவர்களை ஆதரிக்கும் பட்ஜெட்டாக உள்ளதாக அமைச்சர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சி திடலில் விழுப்புரம் மாவட்டத்தின் இரண்டாவது புத்தகத் திருவிழாவை சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் திமுக எம்எல்ஏ லட்சுமணன், ஆட்சியர் பழனி கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து பார்வையிட்டு புத்தகங்களை வாங்கினர்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் மஸ்தான், தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்து ஒட்டுமொத்த தமிழ மக்களும் படித்தவர்களாக இருக்க கல்வி கட்டமைப்பினை உறுதிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பாடுகள் உள்ளன. வாசிப்பு தன்மை அனைவரிடத்திலும் வர வேண்டும் என்பதால் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தக திருவிழா தமிழக அரசால் நடத்தப்பட்டு வருவதாகவும், நாட்டின் நடப்புகள் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டுமென தமிழக முதலமைச்சர் செயல்படுவதாக தெரிவித்தார். அதனை தொடர்ந்து பேசிய அவர் இந்திய நாடு மதச்சார்பற்ற நாடாக இருக்க புத்தக கண்காட்சிகள் ஒரு சாட்சியாக இருக்கும் என்றும் வெளிநாடு வாழ் துறை அமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை 2 ஆயிரத்திற்கும் அதிகமானோரை மீட்டு வந்துள்ளதாகவும் 300 க்கும் மேற்பட்ட இறந்தவர்களின் உடல்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறினார். வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ஏதேனும் இன்னல்கள் ஏற்பட்டால் அவர்கள் தமிழக அரசு கொடுத்துள்ள எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்தால் கூட அவர்களுடன் தொடர்பு கொண்டு மீட்பதற்கான நடவடிக்கை எடுத்து சிறப்பாக வெளிநாடு வாழ்துறை சிறப்பாக செயல்படுவதாகவும், போலி ஏஜெண்டுகள் கண்டறிந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசின் பட்ஜெட்டில் சுதந்திரம் இல்லை என்றும் தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கவில்லை, ரயில்வே துறையில் சொகுசு பெட்டிகளை இணைப்பதாக கூறுவதன் மூலம் சாதாரண ஏழை எளிய மக்கள் வஞ்சிக்கும் வகையில் ஒன்றிய அரசின் பட்ஜெட் இருப்பதாகவும் பணம் படைத்தவர்களை ஆதரிக்கும் பட்ஜெட்டாக உள்ளதாக அமைச்சர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
மேலும் காண