Mark Zuckerberg: மெட்டா குழுமத்தின் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு, ஒரே நாளில் 27 பில்லியன் டாலர் அளவிற்கு உயர்ந்துள்ளது.
மெட்டா நிறுவன வருவாய் விவரம்:
மெட்டா நிறுவனத்தின் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட பிறகு, மெட்டா குழுமத்தின் பங்குகள் நேற்று மட்டும் 20 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மெட்டா நிறுவன பங்குகளின் மதிப்பு கடந்த 2022ஆம் ஆண்டு கடுமையாக சரிந்தது. கடந்த 2022ஆம் ஆண்டில் 35 பில்லியன் டாலர் அளவிற்கு மெட்டா நிறுவன பங்குகள் சரிந்த நிலையில், 2023ஆம் ஆண்டில் முன்னேறியது.
இந்த நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் மெட்டா குழுமத்தின் பங்குகள் 20 சதவீதம் உயர்ந்தது. இதனால், மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு, ஒரே நாளில் 27 பில்லியன் டாலர் அளவிற்கு உயர்ந்துள்ளது.
பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளிய மார்க்:
வரலாறு காணாத அளவிற்கு மெட்டா குழுமத்தின் பங்குகள் நேற்று ஒரே நாளில் 20 சதவீத உயர்ந்துள்ள நிலையில், அதனின் சொத்து மதிப்பும் சரசரவென உயர்ந்தது. 350 பில்லியன் பங்குகளை கையில் வைத்திருக்கும் மார்க், மூன்று மாதத்திற்கு ஒரு முறை 175 பில்லியன் டாலர் வருவாய் பெற்று வருகிறார்.
எனவே, மெட்டா குழுமத்தின் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு தற்போது 170 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதனால், உலகின் மிகப்பெரிய பணக்கார பட்டியலில் நான்காம் இடத்திற்கு சென்றிருக்கிறார் மார்க் ஜுக்கர்பெர்க். அதே நேரத்தில், நான்காவது இடத்தில் இருந்த பில் கெட்ஸ் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். 140 பில்லியன் டாலர் அளவிற்கு சொத்த மதிப்பு வைத்திருந்த பில் கெட்ஸை பின்னுக்கு தள்ளி மார்க் ஜுக்கர்பெர்க் சாதனை படைத்துள்ளார்.
பணிநீக்கங்கள் கைகொடுத்ததா?
உலக அளவில் நிலவும் பொருளாதார மந்தநிலை காரணமாக ஒரு பரந்த மறுசீரமைப்பு முயற்சியை மெட்டா மேற்கொண்டது. அதன் ஒரு பகுதியாக, மெட்டா அதன் நிறுவன கட்டமைப்பை சமன் செய்யவும், செயல்பாடுகளை குறைக்கவும், ஆட்சேர்ப்பு விகிதங்களைக் குறைக்கவும் முடிவெடுத்தது.
அதன்படி, கடந்த 2022-23ஆம் ஆண்டில் சுமார் 21 ஆயிரம் ஊழியர்களை மெட்டா பணிநீக்கம் செய்ததை அடுத்து, 2023ஆம் ஆண்டில் மெட்டா குழுமத்தின் பங்குகள் மூன்று மடங்கு உயர்ந்தது. இந்தாண்டும் பணிநீக்கங்கள் தொடரும் என்று மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்திருந்த நிலையில், 2024ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே மெட்டா குழுமத்தின் பங்குகள் அசுர வளர்ச்சி அடைத்திருக்கிறது.
அதிகரித்த சொத்து மதிப்பு:
இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 204 பில்லியன் டாலர் அளவிற்கும், ஜெஃப் பெசோஸ் சொத்து மதிப்பில் 190 பில்லியன் டாலர் அளவிற்கும், பெர்னார்ட் அர்னால்ட் சொத்து மதிப்பு 182 பில்லியன் டாலர் அளவிற்கும், மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு 170 பில்லியன் டாலர் அளவிற்கும், பில் கெட்ஸின் சொத்து மதிப்பு 145 பில்லியன் டாலர் அளவிற்கும் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண