manjummel boys director chidambaram expresses his admiration for kamalhassan


தான் ஒரு மிகத் தீவிரமான கமல் ரசிகர் என்று மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் இயக்குநர் சிதம்பரம் கூறியுள்ளார்.
மஞ்சும்மெல் பாய்ஸ்
மலையாளத்தில் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான படம் மஞ்சும்மெல் பாய்ஸ். சிதம்பரம் இப்படத்தை இயக்கியுள்ளார். ஸ்ரீநாத் பாஸி , செளபின் சாஹிர் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். கொடைக்கானல் குணா குகையில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ் , மலையாளம் என இருதரப்பு ரசிகர்களிடமும் பாராட்டுக்களைப் பெற்று வசூல் அள்ளி வருகிறது. கமல்ஹாசன் இயக்கிய குணா படத்தை மிக சிறப்பான முறையில் ஒரு ரெஃபரன்ஸாக இப்படத்தில் இயக்குநர் சிதம்பரம் பயன்படுத்தி இருக்கிறார்.  ஒருவகையில் இப்படம் கமல்ஹாசனின் குணா படத்திற்கு புகழாரம் சூட்டுவதுபோல் அமைந்துள்ளது. இப்படியான நிலையில் மஞ்சும்மெல் படத்தின் இயக்குநர் சிதம்பரம் நேர்காணல் ஒன்றில் கமல் குறித்து பேசியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நான் கமலின் தீவிர ரசிகன்

#கமல் சாரோட பெரிய ரசிகன் நான் அவர் ஒரு நடிகரா தாண்டி மிகச் சிறந்த இயக்குனர் சினிமாவிற்காகவே பிறந்தவர், #விருமாண்டி மிகப் பெரிய இன்ஸ்பிரேஷன், 30 வருஷத்துக்கு முன்னாடியே எந்த டெக்னாலஜியும் இல்லாம #குணா எப்படி எடுத்தார்னே தெரியல #ManjummelBoys இயக்குனர் #Chidambaram #KamalHaasan𓃵 pic.twitter.com/B0Np4sPHXJ
— முரட்டு பக்தன் : கமல் பா.சிவா மதுரை (@kamalsivayouth) February 25, 2024

இந்த நேர்காணலில் பேசிய இயக்குநர் சிதம்பரம் “நான் ஒரு மிகப்பெரிய கமல் ரசிகன். கமலின் விருமாண்டி படம் எனக்கு ஒரு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்கிறது. அவர் வெறும் ஒரு நடிகர் மட்டுமில்லை. கமல் சினிமாவுக்காகவே பிறந்தவர். ஐந்து வயதில் இருந்து சினிமாவில் இருப்பதால் அவரது 30 வயதை நெருங்கும்போதே ஒரு மாஸ்டராக மாறிவிட்டார். இன்று எல்லா தொழில்நுட்ப வசதிகளும் இருக்கின்றன. இந்த எல்லா வசதிகள் இருந்து நாங்கள் இந்தப் படத்தை எடுத்திருக்கிறோம். ஆனால் 30 வருஷத்திற்கு முன்னாடியே எந்த வித தொழில்நுட்ப வசதியும் இல்லாமல் ஒரு படத்தையே அந்த குகையில் எடுத்திருக்கிறார் என்று நினைக்கும்போது பிரமிப்பாக இருக்கிறது “ என்று அவர் கூறியுள்ளார்.
குணா
சந்தான பாரதி இயக்கத்தில் கமல் நடித்து 1991-ஆம் ஆண்டு வெளியானப் படம் படம் குணா. ரோஷினி, ஜனகராஜ், எஸ்.பி பாலசுப்ரமணியம் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ரஜினியின் தளபதி படத்துடன் களமிறங்கிய குணா படம் பாக்ஸ் ஆஃபிஸில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : Manjummel Boys Review: குணா குகையில் நடந்த உண்மை சம்பவம்.. மஞ்சும்மல் பாய்ஸ் பட விமர்சனம்! 
Poacher Review: கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான யானைகள்.. அதிர வைக்கும் போச்சர் வெப் சீரிஸ் விமர்சனம்..!

மேலும் காண

Source link