Loksabha Election: டீ போட்டும், கிரிக்கெட் ஆடியும் வாக்கு சேகரித்த நாம் தமிழர் வேட்பாளர்!


<p style="text-align: justify;">கரூர் தான்தோன்றி மலை அரசு கலைக் கல்லூரி அருகே நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் மருத்துவர் கருப்பையா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்பொழுது வாக்காளர்களை கவரும் விதமாக டீ போட்டுக் கொடுத்தும், சலவை செய்தும், கிரிக்கெட் விளையாடியும் வாக்கு சேகரித்தார்.</p>
<p style="text-align: justify;">தொடர்ந்து காந்திகிராமம் பகுதியில் உள்ள உழவர் சந்தையில் விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு நாம் தமிழர் கட்சியின் சின்னம் மைக் என &nbsp;அச்சிடப்பட்ட நோட்டீஸ்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்பொழுது அருகில் உள்ள காந்தி பூங்காவில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞரிடம் உங்கள் பெற்றோர், உறவினர்களை நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள் கரூர் பகுதிக்கு தேவையான அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும் என்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கிரிக்கெட் விளையாடி இளைஞர்களை உற்சாகப்படுத்தினர்.</p>
<p style="text-align: justify;">மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அனைத்துக்கட்சியினரும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் தொகுதியில் நாம் தமிழர் மட்டுமின்றி, தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி ஆகிய கட்சிகளும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>

Source link