கரூரில் துணிகளை தைத்து தையல் கலைஞர்களிடம் வாக்கு சேகரித்தார் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மருத்துவர் கருப்பையா.
கரூர் நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மருத்துவர் கருப்பையா கரூர் மாநகரப் பகுதிகளான செங்குந்தபுரம், திண்ணப்பகார்னர், ஜஹகர்பஜார்,லைட் ஹாஸ் கார்னர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டனர்
அப்பொழுது வாக்காளர்களிடம் வாக்கு சேகரிக்கும் வகையில் ஜஹகர் பஜார் பகுதியில் பேக் மற்றும் செருப்பு தைக்கும் தொழிலாளர்களை சந்தித்து தொழிலாளர்களிடம் வாக்கு சேகரித்தார். தொடர்ந்து தையல் கலைஞரிடம் மைக் சின்னம் அச்சடிக்கப்பட்ட நோட்டீசை வழங்கியும் தையல் தொழிலாளரிடம் துணிகளை தைத்துக் கொடுத்து வாக்கு சேகரித்தார்.
நாம் தமிழர் கட்சியில் போட்டியிடும் என்னை வெற்றி பெற செய்தால் கரூரில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி தருவோம் என்று வாக்குறுதி அளித்து வாக்கு சேகரித்தனர். இந்நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட செயலாளர் நன்மாறன், கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
மேலும் காண