Lok Sabha Election 2024 Karur bjp candidate Senthilnathan says Jothimani is afraid of me and BJP – TNN | என்னையும் பாஜகவையும் கண்டு ஜோதிமணி பயப்படுகிறார்


கரூரில் தேர்தல் பரப்புரையின்போது பணத்தைக் காட்டி வாக்காளர்களுக்கு ஆசையை தூண்டவில்லை என்றும் வழக்கை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் கூறினார்.
 

 
கரூர் பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் தொகுதி முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அப்பிபாளையம் கிராமத்தில் பொதுமக்களை சந்தித்து தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அப்பகுதி பெண்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் அவரை மலர் தூவி வரவேற்றனர்.
 

 
அப்போது செய்தியாளர்களை சந்தித்த செந்தில்நாதன், “பிரச்சாரத்தின்போது 50 ஆயிரம் ரூபாய் பணத்தைக் காட்டி வாக்காளர்களுக்கு ஆசையை தூண்டவில்லை. மேலும் பணத்தை நான் காட்டவில்லை யார் காட்டியது என்று உங்களுக்கு தெரியும். வழக்கை முறையாக எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். 
 
 

 
ஜோதிமணி பிரச்சாரத்தின் போது, என் மீது ஊழல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். என்னையும் பாஜகவையும் கண்டு ஜோதிமணி பயப்பட ஆரம்பித்துள்ளார். தொகுதி மக்களுக்கு என்ன செய்தார் என்று சொல்லாமல், இத்தனை நாள் தொகுதியில் இருந்தேன் என்று பட்டியலிட்டு கூறுகிறார். போகும் இடமெல்லாம் அவருக்கு எதிர்ப்பு உள்ளது. இந்த முறை பாஜக வெற்றி பெற்று விடுமோ என்ற பதட்டத்தில் எந்நேரமும் செந்தில்நாதன் என்று எனது பெயரையே நினைத்துக் கொண்டிருப்பதால் இவ்வாறு பேசி வருகிறார்” என்று தெரிவித்தார்
 
 
 
 
 
.

மேலும் காண

Source link