Lok Sabha Election 2024: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலர் பாஜகவில் இணைந்து வருகின்றனர்.
பாஜகவில் இணைந்த முன்னாள் மத்திய அமைச்சர்:
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுரேஷ் பச்சோரி இன்று போபாலில் பாஜகவில் இணைந்தார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானும் கலந்து கொண்டார். 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைமைக்கு இந்த நடவடிக்கை பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. காந்தி குடும்பத்துடன் நெருக்கமாக இருந்த பச்சௌரி, மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சராகவும் (பாதுகாப்பு உற்பத்தி மற்றும் விநியோகம்) மற்றும் நான்கு முறை ராஜ்யசபா உறுப்பினராகவும் இருந்தார்.
மேலும் காண