Skip to content
  • Home
  • Privacy Policy

ACTP news

Asian Correspondents Team Publisher

  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
 Posted in இந்தியா

LIC Shares Hit 900 Rupees For First Time Overtakes SBI To Become Most Valued Public Sector Unit | LIC Shares: முதன்முறை..! ரூ.900 எட்டிய எல்ஐசி பங்கின் விலை

 Sanjuthra  January 17, 2024

LIC shares: இந்திய பங்குச் சந்தையில் எல்ஐசி நிறுவனத்தின் பங்கின் விலை 900 ரூபாயை எட்டியதன் மூலம், நாட்டின் மதிப்புமிக்க பொதுத்நிறுவனங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
புதிய உச்சம் தொட்ட எல்ஐசி பங்கின் விலை:
லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனம், பங்குச் சந்தையில் புதிய சாதனையை படைத்துள்ளது. அதன்படி,  நிறுவனத்தின் பங்கின் விலை முதல் முறையாக 900 ரூபாயை தொட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் இந்த நிறுவனம் பங்குச்சந்தையில் இருந்து பட்டியலிடப்பட்டதிலிருந்து, இதுவரை இல்லாத புதிய உச்சம் இதுவாகும்.
எல்ஐசி நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 900 ரூபாயை எட்டியது என்பது, பங்குச் சந்தையில் அதன் 52 வாரத்தில் வந்த உச்சமாகும். இதன் மூலம், எல்.ஐ.சி.யின் சந்தை மூலதனம் இப்போது இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவை  விட மிஞ்சியுள்ளது.
நாட்டின் மதிப்புமிக்க பொதுத்துறை நிறுவனம்:
கடந்த 2022ம் ஆண்டு எல்ஐசி பங்குகள் பங்குச் சந்தையில் ரூ.875.25 க்கு பட்டியலிடப்பட்டன.  அதே சமயம் பட்டியலிடுவதற்கு முன் அதன் வெளியீட்டு விலை (IPO) 949 ஆக இருந்தது.  இருப்பினும், இந்த நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து சரிவையே சந்தித்து வர, அதிகபட்சமாக 530 ரூபாய் வரை சரிந்தது. இருப்பினும், கடந்த நவம்பரில் எல்ஐசி பங்குகள் 12 சதவீதத்திற்கும் அதிகமான உயர்வைக் கண்டபோது பங்குகளின் மதிப்பு மீண்டு வர தொடங்கின.
டிசம்பரில் எல்ஐசி பங்குகள் 22.52 சதவிகிதம் உயர்ந்து, ஜனவரி 2024 இன் முதல் இரண்டு வாரங்களில் 7.51 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதேநேரம், தற்போதும் இந்த பங்குகளின் விலை IPO விலையில் இருந்து 6.21% வரை குறைவாக உள்ளது. இருப்பினு,  தொடர் ஏறுமுகத்தால் எல்ஐசியின் சந்தை மூலதனம் ரூ.5.66 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. கடந்த மூன்று மாதங்களில் எல்ஐசி நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.1.83 லட்சம் கோடி அதிகரித்துள்ளது . எஸ்பிஐ வங்கியின் சந்தை மதிப்பு என்பது ரூ.5.63 லட்சம் கோடியாக உள்ளது. இதன் மூலம் நாட்டின் மதிப்புமிக்க பொதுத்துறை நிறுவனமாக எல்ஐசி உருவெடுத்துள்ளது. ஆனால், கூடிய விரைவில் எஸ்பிஐ வங்கி மீண்டும் முதலிடம் பிடிக்கும் என வல்லுநர்கள் கருதுகின்றனர்.
அரசின் திட்டம்:
எல்ஐசி முதலிடத்தைப் பெற்றிருந்தாலும், நிறுவனத்தில் முதலீட்டாளர்களுக்கு குறிப்பிடத்தக்க இழப்பு உள்ளது. இரண்டு ஆண்டுகளாக நஷ்டத்தில் இருந்த நிலையில் முதன்முறயாக, எல்ஐசியின் பங்கு விலைகள் வெளியீட்டு விலைக்கு நிகரான நிலையை எட்டியுள்ளது.  எல்ஐசி பங்கு இப்போது பட்டியலிடப்பட்ட விலையை விட அதிகமாக இருந்தாலும், அவை இன்னும் ஐபிஓ விலைக்குக் குறவாகவே உள்ளன. நிதி திரட்டும் நோக்கில் காப்பீட்டு நிறுவனத்தின்  21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்றது. இந்நிறுவனத்தில் அரசாங்கம் இன்னும் 96.5 சதவீத பங்குகளை கைவசம் வைத்துள்ளது.

Source link

Post navigation

Admk Former Minister Jeyakumar Says Greatest Of All Time MGR Did Jayakumar Indirectly Attack Actor Vijay – TNN | என்றைக்கும் எம்ஜிஆர்தான் ‘GOAT’ →
← Tamilnadu Latest Headlines News Update 17th January 2024 Tamilnadu Flash News

Recent Posts

  • கேரளாவில் பயங்கரம் – அந்தரத்தில் தொங்கிய ரெஸ்டாரன்ட் – மக்கள் அச்சம்…
  • இந்தோனேசியாவில் வெள்ளத்திற்கு 174 பேர் உயிரிழப்பு
  • அமெரிக்காவை பின்னுக்கு தள்ளும் சீனா – புதிய ராக்கெட்டை ஏவியது…
  • உத்தரகாண்டில் அடுத்ததுத்து பெரிய நிலச்சரிவு வரும் – ஆய்வாளர்கள் எச்சரிக்கை
  • குற்ற வழக்குகளை முடிக்க ரூ.2 லட்சம் லஞ்சம் – 2 போலீசாருக்கு 5 ஆண்டு சிறை

Recent Comments

No comments to show.

Recent Posts

  • கேரளாவில் பயங்கரம் – அந்தரத்தில் தொங்கிய ரெஸ்டாரன்ட் – மக்கள் அச்சம்…
  • இந்தோனேசியாவில் வெள்ளத்திற்கு 174 பேர் உயிரிழப்பு
  • அமெரிக்காவை பின்னுக்கு தள்ளும் சீனா – புதிய ராக்கெட்டை ஏவியது…
  • உத்தரகாண்டில் அடுத்ததுத்து பெரிய நிலச்சரிவு வரும் – ஆய்வாளர்கள் எச்சரிக்கை
  • குற்ற வழக்குகளை முடிக்க ரூ.2 லட்சம் லஞ்சம் – 2 போலீசாருக்கு 5 ஆண்டு சிறை
  • அமலாக்கத்துறைக்கு எதிராக டாஸ்மாக் அதிரடி வழக்கு!
  • திமுகவின் துரோகத்தை சுட்டிக்காட்டினால் அச்சுறுத்துவதா? – டாக்டர் ராமதாஸ் கண்டனம்
  • ஏர்ப்போர்ட்டுக்கு ஆயிரம் ஏக்கர் தேவையில்லை… ஆந்திராவின் அதிரடி திட்டம்…
  • வடகொரியாவின் புதுவித தாக்குதலால் அதிர்ந்த தென் கொரியா… அச்சத்தில் அமெரிக்கா…
  • டீ மட்டும்தான் கொடுத்தாரு… ரஜினியை சந்தித்த வைரமுத்து பகீர் பதிவு…

Copyright © 2025 ACTP news

Design by ThemesDNA.com