Lal Salaam : இன்று வெளியாகும் ‘லால் சலாம்’ படத்தின் ட்ரைலர்… படக்குழு வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
நடிகர் விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள லால்சலாம் திரைப்படம் வரும் பிப்ரவரி 9ம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகவுள்ளது.
A R Rahman : இசையில் புதிய தொழில் நுட்பங்களை அறிமுகம் செய்யும் இசைப்புயல்: அப்படி என்ன விசேஷம்ன்னு பாருங்க
லால் சலாம் படத்தைப் போல் மற்றொரு புதுமையான முன்னெடுப்பை ரஹ்மான் தொடங்கியிருக்கிறார். சமீபத்தில் SWFI ஓருங்கிணைத்து துபாயில் நடைபெற்ற Abundance for the future நிகழ்வில் ரஹ்மான் மெட்டா ஹ்யூமன்ஸ் என்கிற புதிய முன்னெடுப்பை அறிமுகப்படுத்தினார். வெவ்வேறு கலாச்சாரப் பின்புலத்தைச் சேர்ந்த ஆறு இசைக்கலைஞர்களை உள்ளடக்கியதே இந்தத் திட்டம். மனிதநேயத்தைப் பரப்பும் வகையில் உலகெங்கிலும் இருக்கும் பல்வேறு இசைக் கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆறு இசைக்கலைஞர்கள் செய்ல்பாடுவார்கள். இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த ஆறு நபர்களும் நிஜ மனிதர்கள் கிடையாது . அவர்கள் மெய்நிகர் உருவங்கள் மட்டுமே. அதனால்தான் இதற்கு மெட்டா ஹ்யூமன்ஸ் என்று பெயர் வைக்கப் பட்டுள்ளது.மேலும் படிக்க
Grammy Award sakti: இசைத்துறையின் பெரும் அந்தஸ்து, கிராமி விருதை வென்ற சங்கர் மகாதேவனின் சக்தி இசைக்குழு
இசைக்கலைஞர்களுக்கான உயரிய அங்கீகாரமாக கருதப்படும், கிராமி விருது வழங்கும் 66வது ஆண்டு விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் சிறந்த ஆல்பம் பிரிவில் இந்தியாவின் இசைக்குழு விருது வென்றது. சுசானா பாக்கா, பொகாண்டே, பர்னா பாய் மற்றும் டேவிடோ போன்ற கலைஞர்களிடமிருந்து நிலவிய கடும் போட்டிக்கு மத்தியில் சக்தி குழு விருதை தனதாக்கியுள்ளது. மேலும் படிக்க
Thalapathy Vijay: அதை செய்தால் விஜய் அரசியலில் காணாமல் போய் விடுவார்.. நாஞ்சில் சம்பத் எச்சரிக்கை!
நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள நாஞ்சில் சம்பத், “விஜய் அரசியலில் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். எம்ஜிஆரை விட சிவாஜி தான் சிறந்த நடிகர். மற்ற நடிகர்களுக்கு உதடு பேசும் என்றால் சிவாஜிக்கு உடலே பேசும். அந்த சிவாஜியே தேர்தலில் ஜானகி அணியுடன் கூட்டணி வைத்து தோத்தாரு. அதன்பின் ஜனதா தளத்தில் கட்சியை ஒப்படைத்து விட்டு சென்றார். இதிலிருந்து விஜய் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். சாதி செல்வாக்கு உள்ளவர், நல்ல காதல் படங்களை தந்து உள்ளத்தை அள்ளிக்கொண்டவர் கார்த்திக் நேதாஜி சுபாஷ் சந்திரபோஷின் பேரை சொல்லக்கூடிய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் என சொன்னார். எம்ஜிஆரின் கலையுலக வாரிசு பாக்யராஜ், திறமைசாலி டி.ராஜேந்தர் உள்ளிட்டோர் அரசியலில் ஜொலிக்கவில்லை. அதனால் நடிகர்கள் கட்சி தொடங்கினால் ஜெயிக்கலாம் என்பது தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது. மேலும் படிக்க
Niharika Konidela: 5 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கும் நிஹாரிகா..!
நடிகை நிஹாரிகா, மீண்டும் படங்களில் முழு வீச்சில் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில் 5 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் தமிழ் படத்தில் கமிட்டாகியுள்ளார். SR PRODUCTIONS சார்பில் B. ஜகதீஸ் தயாரிப்பில், ரங்கோலி படப்புகழ் இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகும் படம் “மெட்ராஸ்காரன்”. மலையாள நடிகர் ஷேன் நிகாம், கலையரசன் இணைந்து நடிகும் நிலையில் இப்படம் புதுமையான திரில்லர் டிராமாவாக உருவாகிறது.மேலும் படிக்க
மேலும் காண