lal salaam rajinikanth share emotional tweet wishing his daughter aishwarya | Rajinikanth: “அன்புத் தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம்”


தன் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் கௌரவக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ளது. தன் மகள் இயக்கத்தில் முதன்முதலாக ரஜினிகாந்த் இப்படத்தில் நடித்துள்ளார்.
மேலும் விஷ்ணு  விஷால், விக்ராந்த், செந்தில், ஜீவிதா, நிரோஷா, கபில் தேவ் எனப் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். கிரிக்கெட்டில் செய்யப்படும் மத அரசியல், 90களை அடிப்படையாகக் கொண்ட கதை என முன்னதாக வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் படம் மீதான எதிர்பார்ப்புகளை முன்னதாக அதிகரிக்கச் செய்தது. இந்நிலையில் இன்று காலை வெளி நாடுகள், அண்டை மாநிலங்களில் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்களை வழங்கி வருகின்றனர்.
மொய்தீன் பாய் எனும் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள நிலையில் படத்தில் ரஜினி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளதாகவும், ஏ.ஆர்.ரஹ்மானின் இசை சிறப்பாக ரஜினி பாத்திரத்துக்கு பொருந்தியுள்ளதாகவும் ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், தன் மகள் ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்து ரஜினிகாந்த் உணர்ச்சிகரமான ட்வீட்டினைப் பதிவிட்டுள்ளார். “என் அன்புத் தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம். உங்களுடைய லால் சலாம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
 

என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம்.உங்களுடைய லால் சலாம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்@ash_rajinikanth #LalSalaam pic.twitter.com/bmRe8AGLkN
— Rajinikanth (@rajinikanth) February 9, 2024

மேலும் காண

Source link