Know Actor Prakashraj net worth details on his 59th birthday


இந்திய சினிமா எத்தனையோ வில்லன்களை கடந்து வந்துள்ளது. ஒரு சிலரின் மிரட்டலான லுக், மேனரிசம், அடிதடி, சைக்கோத்தனம், கம்பீரமான தோற்றம் இப்படி பல வகையிலும் எதிராளிகளுக்கு வில்லத்தனத்தை நிரூபிப்பார்கள். ஆனால் சிரித்துக்கொண்டே கொடூரத்தை கக்கும் செல்லமான வில்லன் என்றால் அது எந்த ஒரு சந்தேகமும் இன்றி நடிகர் பிரகாஷ்ராஜ் தான். அவரின் திறமையான நடிப்பு வில்லத்தனத்தில் மட்டுமின்றி அன்பு, பாசம், பரிவு, குணச்சித்திரம் என பல வகையிலும் வெளிப்படுத்தக்கூடிய மகா நடிகர். கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகத்தில் பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களின் ஃபேவரட் நடிகராக இருந்து வரும் பிரகாஷ்ராஜ் பிறந்த தினமான இன்று அவரின் சொத்து மதிப்பு குறித்த விவரங்களை பார்க்கலாம். 
 

 
சினிமாவில் அறிமுகம் :
இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர் கண்டுபிடிப்புகளில் ஒரு தலைசிறந்த நடிகர் பிரகாஷ் ராஜ். அவரின் தாய்மொழி கன்னடம் என்பதால் கன்னட நாடகங்களில் நடித்து வந்தார். அதன் மூலம் தமிழ் சினிமாவில் ‘டூயட்’ படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார் கே. பாலச்சந்தர். அறிமுக படமே அப்படி ஒரு வரவேற்பை பெற்று கொடுத்தது. அதை தொடர்ந்து அவர் நடித்த படங்கள் அனைத்திலுமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். நெகட்டிவ் கேரக்டர் மட்டுமின்றி அவர் எந்த ஒரு கதாபாத்திரமாக நடித்தாலும் அந்த கதாபாத்திரமாக ஒன்றி போய் நடிப்பது அவரின் தனிச்சிறப்பு. அவரின் நடிப்பு திறமைக்கு சான்றாக ஏராளமான விருதுகளையும் 5 முறை தேசிய விருதையும் பெற்றுள்ளார்.  
 

சொத்து மதிப்பு :
ஒரு தலைசிறந்த நடிகராக மட்டுமின்றி இயக்குநர், தயாரிப்பாளர், தொகுப்பாளர் என திரைத்துறையில் மட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டுள்ளார். 300 ரூபாய் சம்பளத்தில் தன்னுடைய திரைப்பயணத்தை துவங்கிய பிரகாஷ் ராஜ் தற்போது ஒரு படத்தில் நடிக்க சம்பளமாக 2.5 கோடி முதல் 3 கோடி வாங்குகிறார் என கூறப்படுகிறது. திரைப்படங்களில் நடிப்பதுடன் விளம்பர தூதராகவும் இருந்து வருகிறார். படங்களை தயாரிப்பதன் மூலமும் சம்பாதித்து வருகிறார். இப்படி பல வகையிலும் வருமானத்தை ஈட்டும் பிரகாஷ் ராஜ் சொத்து மதிப்பு சுமார் 35 முதல் 40 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் சென்னை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் சொகுசு பங்களா, கொடைக்கானலில் ஃபார்ம் ஹவுஸ்களும் அவருக்கு இருப்பதாக கூறப்படுகிறது. 
இன்றும் பிஸியாக பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் பிரகாஷ்ராஜ் தற்போது தேவாரா, புஷ்பா 2, யுவா, ராயன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.  இதுமட்டுமல்லாமல், துணிச்சலாக, மத்திய அரசின் நடிவடிக்கைகளை விமர்சித்து அரசியல் கருத்துக்களைத் தெரிவிப்பதில் நம்பர் 1-ஆகவும் இருந்து வருகிறார் 

மேலும் காண

Source link