kilambakkam: இடம் நிறைய இருக்கு கொஞ்சம் இருக்கை போடுங்க… கிளாம்பாக்கத்தில் அவதிப்படும் பயணிகள்..!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய இருக்கைகள் இல்லாமல் பயணிகள் அவதி

கடந்த மாதம் தமிழ்நாடு முதலமைச்சரால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. பேருந்து நிலையம் செயல்பாட்டிற்கு வந்ததிலிருந்து, பல்வேறு குறைபாடுகளும் சர்ச்சைகளும் இருந்த வண்ணம் உள்ளன. பொதுமக்கள் வைக்கும் கோரிக்கைகளும் தமிழக அரசு மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள்  அவற்றை நிறைவேற்றியும் வருகின்றனர்.  புதிய பேருந்து நிலையம் என்பதால் பல்வேறு  நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு,  அவற்றை சரி செய்யும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய இருக்கைகள் இல்லாமல் பயணிகள் அவதி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டத்திற்கு செல்லக்கூடிய அனைத்து அரசு விரைவு பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து செல்லும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல தென் மாவட்டத்திற்கு செல்லக்கூடிய பிற பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து செல்லும் எனவும் கூறப்பட்டுள்ளது. இருக்கைகள் அமைப்பதற்கு இடம் இருந்தும் இருக்கைகள் இல்லாததால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் பேருந்துக்காக காத்திருக்கும் பொழுது கரையில் அமர்ந்து கொண்டு குடும்பத்துடன் நீண்ட நேரம் காத்துக் கிடக்கின்றனர். அதே போன்று, உயரமான சுற்று சுவர்கள் மீதும் ஆபத்தான முறையில் ஏறி அமர்ந்து கொண்டு பயணிகள் பேருந்துக்காக காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இருக்கைகள் போடுவதற்கு நிறைய இடம் இருப்பதால், அந்த இடங்களில் இருக்கை அமைத்து தர பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்கு பணம் மேற்கொண்டு வருகின்றனர்

இந்த ஆண்டுக்கான பொங்கல் விடுமுறை இன்று முதல் தொடங்கிவிட்டது என்றே கூறலாம். இன்று தொடங்கி அதாவது ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி ஜனவரி 17ஆம் தேதி வரைக்கும் பொங்கல் கொண்டாட்டத்திற்கான விடுமுறையாக உள்ளது. இதனால் வெளியூரில் வேலை செய்யும் மக்கள் தங்களது சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர். இதற்காக தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் ஏற்கனவே அறிவித்தைப் போல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் நேற்று மட்டும் சுமார் 2.17 லட்சம் மக்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்றுள்ளனர்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய இருக்கைகள் இல்லாமல் பயணிகள் அவதி

அதாவது 3 ஆயிரத்து 946 பேருந்துகளில் நள்ளிரவு 12 மணிவரை இரண்டு லட்சத்து 17 ஆயிரத்து 30 பேர் பயணம் செய்துள்ளனர். இதுவரை ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 310 பேர் சொந்த ஊர்களுக்குச் செல்ல முன்பதிவு செய்துள்ளனர். மக்கள் சொந்த ஊருக்குச் செல்ல வரும் 14ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

Source link