Khelo India Youth Sports Competition Awareness Mini Marathon Competition At Villupuram – TNN | கேலோ இந்தியா இளைஞா் விளையாட்டு போட்டி விழிப்புணர்வு

தமிழ்நாட்டில் தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் விதமாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டியினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாக மைதானத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், தமிழ்நாட்டில் தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப்போட்டி நடைபெறவுள்ளதை முன்னிட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் விதமாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற மாரத்தான் போட்டியினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய முயற்சியினால், கிராமப்புற இளைஞர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே உள்ள விளையாட்டுதிறனை மேம்படுத்திடும் வகையில், தமிழ்நாட்டில் பல்வேறு சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம், தமிழ்நாட்டில் இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் பெருமளவில் விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்று சாதனை புரிந்து வருகிறார்கள்.
அதன் தொடர் நிகழ்வாக, 6வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் தமிழ்நாட்டில் 2024 ஜனவரி 19 முதல் 31ஆம் தேதி வரை சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது. இப்போட்டிகளில் களரிபயட்டு மற்றும் மல்லர்கம்பம் விளையாட்டுகள் திருச்சி மாநகரிலும் கூடைப்பந்து மற்றும் நாக்டா விளையாட்டுகள் கோயம்புத்தார் மாநகரிலும், கட்கா மற்றும் கோ-கோ விளையாட்டு போட்டுகள் மதுரை மாநகரிலும், சிலம்பம் விளையாட்டுப் போட்டிகள் அனைத்து போட்டிகள் நடைபெறும் இடங்களிலும் அறிமுகப் போட்டியாக நடைபெறவுள்ளது. இதரப் போட்டிகள் அனைத்தும் சென்னை மாநகரில் நடைபெறவுள்ளது.
தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாட்டில் நடைபெறுவதை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பத்தும் வண்ணம் இன்றைய தினம், மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மாரத்தான் போட்டிகள் துவக்கி வைக்கப்பட்டது. மாரத்தான் போட்டியில் 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். இந்த மாரத்தான் போட்டியானது மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் தொடங்கி, எல்லிஸ் சத்திரம் சாலை, புதிய பேருந்து நிலையம் வழியாக வந்து மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் நிறைவடைந்தது.
தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு விளையாட்டுப்போட்டிகள் தொடர்ந்து நடைபெறுவதால் விழுப்புரம் மாவட்டத்தினைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் ஒவ்வொருவரும் தங்கள் திறனுக்கேற்ற விளையாட்டினை தேர்ந்தெடுத்து அதில் தங்கள் திறனை மேம்படுத்திக்கொண்டு, சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தெரிவித்தார்.

Source link