White Rose: நடிகை கயல் ஆனந்தி நடித்துள்ள ‘ஒயிட் ரோஸ்’ படத்தின் (First Look) முதல் பார்வையை மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார்.
பூம்பாறை முருகன் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் கயல் ஆனந்தி கதாநாயகியாக நடித்திருக்கும் திரில்லர் படம் ’ஒயிட் ரோஸ்’. இதில் நடிகர் ஆர்.கே சுரேஷ் மாறுபட்ட வில்லனாக நடித்துள்ளார். இவர்களுடன் விஜித், புதுமுகம் ரூசோ ஸ்ரீதரன், சசிலயா, கணேஷ், ராமநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் முதல் பார்வை போஸ்டரை நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார்.
வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துவரக்கூடிய கயல் ஆனந்தியின் ‘ஒயிட் ரோஸ்’ படத்தின் முதல் பார்வை ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக நடிகர் விஜய்சேதுபதி படத்தின் முதல் பார்வையை வெளியிட்டதுடன், படக்குழுவினருக்குத் தனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.
படத்தின் கதையில் காவல் கட்டுபாட்டு மையம் முக்கிய பங்கு வகுக்கிறது. அது தத்ரூபமாக இருக்கவேண்டும் என்பதற்காக, பல லட்ச ரூபாய் செலவில் செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றது. இப்படத்தின் மூலமாக சுசிகணேசனின் உதவியாளர் ராஜசேகர் இயக்குநராக அறிமுகம் ஆகிறார். இளையராஜா ஒளிப்பதிவு செய்ய, கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார். படத்திற்கு சுதர்ஷன் இசையமைத்துள்ளார்.
இவர் மட்டுமில்லாமல் ஜோகன் செவனேஷ் ஒரு பாடலுக்கு இசையமைத்துள்ளார். டி.என். கபிலன் கலையை கவனிக்கிறார். படத்தின் போஸ்ட் புரடெக்ஷன் வேலைகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், படம் மிக விரைவில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக தயாரிப்பாளர் ரஞ்சனி தெரிவித்துள்ளார்.
கயல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ஆனந்தி ‘சண்டிவீரன்’, ‘திரிஷா இல்லைன்னா நயன்தாரா’, ‘விசாரணை’, ‘எனக்கு இன்னொரு பேரு இருக்கு’, ‘ரூபாய்’, ‘மன்னர் வகையறா’, ராவண கோட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை பெற்றுள்ளார். இதற்கிடையே, நடிகை கயல் ஆனந்தி நடித்த ‘மங்கை’ என்ற திரைப்படம் வரும் மார்ச் மாதம் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் டிரைலர் இணையத்தில் வரவேற்பை பெற்று வருகிறது.
2021-ஆம் ஆண்டு மூடர்கூடம் இயக்குநர் நவீனின் இயக்குநரான சாக்ரடீஸ் என்பவரை திருமணம் செய்த கயல் ஆனந்திக்கு ஒரு மகள் உள்ளார்.
மேலும் படிக்க: GOAT Vijay: கோட் படத்தில் சோகம் – துண்டான விஜய் கை விரல்..இணையத்தில் வைரலாகும் புகைப்படம்
Jayam Ravi: இன்னும் ரெண்டு வருஷத்துக்கு ஜெயம் ரவி பிசி! படங்கள் பட்டியலை பாருங்க!
மேலும் காண