Karur news Army soldier fell from the train and died miserably – TNN | ரயிலில் இருந்து தவறி விழுந்த ராணுவ வீரர் உயிரிழப்பு


கரூரில் ரயிலில் இருந்து தவறி விழுந்த இராணுவ வீரர் தலை துண்டித்து பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
 

கரூர் ரயில்வே நிலையத்தில் தினசரி 50க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பாஸ்கர் என்ற இராணுவ வீரர் ஒரு மாத விடுப்பில் சொந்த ஊருக்கு செல்ல சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து மதுரை நோக்கி சென்ற ரயிலில் பயணித்துள்ளார்.
 

 
மதியம் கரூர் வந்தடைந்த ரயில் சிறிது நேரம் நின்றது. அப்போது கீழே இறங்கி விட்டு மீண்டும் ரயிலில் ஏறும்போது பாஸ்கர் தடுமாறி கீழே விழுந்தார். அப்போது, ரயில் சக்கரம் ஏறியதில் தலை துண்டிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றி ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் ரயில் நிலையத்தில் இருந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
 

 
 
 
 
 

மேலும் காண

Source link