Karur News 3 Dogs Coming Together To Bite A Girl In Pallapatti Area Video Going Viral On Social Media – TNN

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பள்ளப்பட்டி பகுதியில் 3 நாய்கள் ஒன்று சேர்ந்து சிறுமியை கடிக்க துரத்தும் காட்சி  சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்த நிலையில் நாய்களை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
 

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் உள்ள ரசூல் நகரில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. அப்பகுதி முழுவதும் ஏராளமான நாய்கள் சுற்றி சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் குழந்தைகள், பொதுமக்களை அனைத்து  ஒன்றுசேர்ந்து  துரத்தி கடித்து வருவதாகவும் இதனால் அப்பகுதி சார்ந்த பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடமும் அரசு அதிகாரியிடமும் பலமுறை புகார் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
 

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அந்த வழியாக பானு என்ற சிறுமி சென்றுள்ளார். அப்போது மூன்று நாய்கள் ஒன்று சேர்ந்து சிறுமையை கடிக்க துரத்தியுள்ளது. அப்போது அருகே இருந்தவர்கள் மூன்று நாய்களையும் துரத்தி விட்டனர்.
 
 

இதனால் சிறுமி காயம் இல்லாமல் தப்பித்தார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பள்ளபட்டி நகராட்சி நிர்வாகம் விரைந்து நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
 
 
 
 

Source link