Karthigai Deepam: தீபாவுக்காக சவால் விட்ட கார்த்திக்: சிக்கப்போகும் ஐஸ்வர்யா: கார்த்திகை தீபம் அப்டேட்!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாடி முடித்த தீபாவை கார்த்திக் ஹாஸ்பிடல் கூட்டிக் கொண்டு வர, அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் எனத் தெரிந்து தீபா அதிர்ச்சியில் ஓடி வந்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது தீபாவை ஹாஸ்பிடலில் விட்டு விட்டு வீட்டுக்கு வந்த கார்த்திக் எல்லோரிடமும் தர்மலிங்கத்துக்கு ஹார்ட் அட்டாக் வந்துள்ள விஷயத்தைச் சொல்கிறான். “இதுக்கு காரணம் நம்ம வீடும் தான்” என்று சொல்ல, எல்லோரும் குழப்பம் அடைகின்றனர்.

ராஜேஸ்வரி தான் பேப்பரில் தீபா பற்றி தப்பான செய்தியை போடச் சொன்னது என்று சொல்வது மட்டுமல்லாமல், “அவங்க தான் சீர்வரிசை கேட்டு தர்மலிங்க மாமாவ அவமானப்படுத்தினாங்க, அதனாலதான் அவர் சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தில் சீர் செய்துள்ளார்” என்ற உண்மையை உடைக்கிறார்.

இதையெல்லாம் கேட்ட ராஜேஸ்வரி, “அவர் உடம்பு சரியில்லாமல் போனதற்கு நான் எப்படி காரணமாக முடியும்?” எனக் கேட்பதோடு “எதை வச்சு நான் தான் நியூஸ் பேப்பர்ல செய்தி போட சொன்னேன்னு சொல்றீங்க? ஆதாரம் இல்லாம பேசாதீங்க” என்று கேட்க, “செய்தி போடச் சொன்னது நீங்க தானே? நான் நிரூபித்துக் காட்டுறேன்” என சவால் விடுகிறான்.

இதையடுத்து “கார்த்திக் என்ன செய்யப் போறான்” என ராஜேஸ்வரி மற்றும் ஐஸ்வர்யா குழப்பத்தில் இருக்க, கார்த்திக் நியூஸ் எடிட்டர் ரவி வீட்டுக்கு வருகிறான். அங்கு வந்து வீட்டில் நடந்த விஷயங்களை சொல்லி “நீங்க வந்து உண்மையை சொல்லணும்” என்று கூப்பிட, ரவி “எனக்கு எதுவும் பிரச்சனை வராதா?” என்று பயப்படுகிறான்.

ரவியின் மனைவி “நீங்க செய்த தவற நீங்கதான் சரி செய்யணும், ஒரு பொண்ணோட வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும்” என்று அட்வைஸ் செய்ய, அவன் உண்மையை சொல்ல ஒப்புக்கொள்கிறான். மற்றொருபுறம் வீட்டில் என்ன நடக்கப்போகிறது எனத் தெரியாமல் எல்லோரும் காத்திருக்கின்றனர்.  இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.

Source link