Joe Root Scripts History, Goes Past Ricky Ponting To Become Highest Run-scorer Against India In Test Cricket

 
டெஸ்ட் கிரிக்கெட் தொடர்:
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸ் கடந்த ஜனவரி 25 ஆம் தேதி தொடங்கியது. முதல் நாள் ஆட்டத்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து அணி. பின்னர் இந்திய அணி களம் இறங்கியது. அதன்படி சிறப்பாக விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 436 ரன்களை குவித்தது.
 
இதனையடுத்து தங்களது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய சாக் கிராலி 31 ரன்களும், பென் டக்கெட் 47 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய ஜோ ரூட் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால், இன்றைய போட்டியில் அவர் ஒரு மாபெரும் சாதனையை செய்துள்ளார்.
 
ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்த ஜோ ரூட்:
அதாவது இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்து முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய வீரர் ரிக்கிபாண்டிங்கின் சாதனையை ஜோ ரூட் முறியடித்துள்ளார். முன்னதாக கடந்த 1996 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியை டெல்லியில் விளையாடினார் ரிக்கி பாண்டிங். அந்த போட்டியில் முதல் டெஸ்ட்டில் 14 ரன்களும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 13 ரன்களும் எடுத்தார்.
 
அதேபோல், இந்திய அணிக்கு எதிராக கடந்த 2012 ஆம் ஆண்டு தனது கடைசி டெஸ்ட் போட்டியை விளையாடியிருக்கிறார். இவ்வாறாக இதுவரை இந்திய அணிக்கு எதிராக மொத்தம் 29 டெஸ்ட் போட்டிகள் விளையாடியுள்ள ரிக்கிப்பாண்டிங் 54.36 என்ற சராசரியுடம் 8 சதங்கள் மற்றும் 12 அரைசதங்களில் விளாசி மொத்த, 2555 ரன்களை குவித்துள்ளார். இதில் அவருடைய அதிகபட்ச ஸ்கோர் 257 ரன்கள். இச்சூழலில் தான் இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் 2557 ரன்கள் எடுத்த ரிக்கி பாண்டிங்கின் சாதனையை இன்றைய போட்டியில் 1  ரன்னை எடுத்த போது ஜோ ரூட் முறியடித்துள்ளார். முன்னதாக, ஜோ ரூட் இந்திய அணிக்கு எதிராக இதுவரை 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இதில், 9 சதம் மற்றும் 10 அரைசதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த டாப் 5 வீரர்கள்:
1. ஜோ ரூட் : 2557
2. ரிக்கி பாண்டிங் : 2555
3. அலெஸ்டர் குக் : 2431
4. க்ளைவ் லாய்ட் : 2344
5. ஜாவேத் மியாண்டட்: 2228
 
மேலும் படிக்க: Australian Open final: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்… சாம்பியன் பட்டத்தை வென்ற சபலெங்கா!
 
மேலும் படிக்க: IND vs ENG Test: ஆதிக்கம் செலுத்த நினைத்த இந்திய பவுலர்கள்; டஃப் கொடுத்த போப் சதம்; இங்கிலாந்து 126 ரன்கள் முன்னிலை
 

Source link