ஜெயம் ரவி நடித்துள்ள சைரன் (Siren) படத்துக்கு மக்களிடையே வரவேற்பு முதல் நாளைக் காட்டிலும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.
சைரன்
ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில், தயாரிப்பாளர் சுஜாதா விஜய் குமார் தயாரிப்பில், நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள சைரன்படம் நேற்று பிப்ரவரி 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இரும்புத்திரை, விஸ்வாசம், ஹீரோ உள்ளிட்ட படங்களில் திரைக்கதை எழுத்தில் பணியாற்றிய அந்தோணி பாக்யராஜ் “சைரன்” திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. நடிகர் ஜெயம் ரவி இதுவரை ஏற்றிராத ஒரு புது கதாபாத்திரத்தில் இரண்டு விதமான தோற்றங்களில் நடிக்கிறார். நடிகை கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக நடிகர் ஜெயம் ரவியுடன் இப்படத்தில் இணைந்துள்ளார். காமெடி மட்டுமல்லாது கதையுடன் ஒன்றிய வித்தியாசமான பாத்திரத்தில் யோகி பாபு நடிக்கிறார். மேலும் நடிகர் சமுத்திரக்கனி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள்.
படத்தின் கதை
ஆம்புலன்ஸ் டிரைவராக இருக்கும் ஜெயம் ரவி செய்யாத குற்றத்திற்காக ஆயுள் தண்டனைக் கைதியாக 14 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படுகிறார். பின்னர் 14 நாட்கள் பரோலில் வீட்டிற்கு வருகின்றார். வீட்டில் இருக்கும் அனைவரும் அவரைப் பார்க்க ஆசையாக இருக்கு ஜெயம் ரவியின் மகள், “கொலைகார அப்பாவைப் பார்க்க மாட்டேன்” எனக் கூறி வீட்டில் இருந்து வெளியே போகிறார். தனக்கு கிடைத்த பரோலில் தனது குடும்பத்தை பார்ப்பது மட்டும் இல்லாமல், தான் 14 ஆண்டுகள் சிறையில் இருக்க காரணமானவர்களை பழிவாங்கவும் ஜெயம் ரவி முயற்சி செய்கின்றார். அந்த முயற்சியில் வெற்றி பெற்றாரா, இல்லையா என்பது மீதிக்கதையாக உள்ளது.
முதல் நாள் வசூல்
ஜெயம் ரவி நடித்து முன்னதாக வெளியான இறைவன் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதனால் சைரன் படத்தின் மீது மக்களுக்கு சற்று எதிர்பார்ப்புகள் குறைந்தே காணப்பட்டன. ஆனான் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. இதனால் முதல் நாளைக் காட்டிலும் படத்திற்கு வசூல் அதிகரித்துள்ளது.
*Siren Day 3 Morning Occupancy: 14.90% (Tamil) (2D) #Siren https://t.co/fYlgs7FJsp*
— Sacnilk Entertainment (@SacnilkEntmt) February 18, 2024
இந்நிலையில் சைரன் படத்தின் வசூல் நிலவரம் பற்றி பாக்ஸ் ஆஃபிஸ் தரவுகளைப் பகிரும் சாக்னிக் தளம் பகிர்ந்துள்ளது. அதன்படி, முதல் நாளில் சைரன் படம் இந்தியளவில் ரூ.1.4 கோடிகளை வசூல் செய்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்று படம் ரூ.1.73 கோடிகளை வசூல் செய்துள்ளது. மூன்றாவது நாளான இன்று ஞாயிறு விடுமுறை என்பதால் படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் படிக்க : Siragadikka Aasai: சிட்டி வைத்த ட்விஸ்ட்.. காரை விற்ற முத்து – சிறகடிக்க ஆசை சீரியலின் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ!
Shaktimaan: அட… சக்திமானாக ரன்வீர் சிங்! கைகோர்க்கும் மின்னல் முரளி இயக்குநர்? வேற லெவல் தகவல்!
மேலும் காண