இந்தியன் பிரீமியர் லீக் 2024ன் 17வது சீசன் வருகின்ற மார்ச் 22ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இடையேயான போட்டியுடன் தொடங்குகிறது. ஐபிஎல்லின் முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணையை சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டது. அதன்படி, வருகின்ற ஏப்ரல் 7 ம் தேதி வரை அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

ஐபிஎல் நிர்வாகம் மீதமுள்ள போட்டிகளுக்கான தேதிகளை வரும் நாட்களில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு நாளில் இரண்டு போட்டிகள் இருந்தால் பகல்நேர போட்டிகள் இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கும், மாலை போட்டிகள் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கும் தொடங்கும்.

ஐபிஎல் 2024க்கான முதல் கட்ட அட்டவணையை கீழே பார்க்கவும்:

The wait is over 🥳

𝙎𝘾𝙃𝙀𝘿𝙐𝙇𝙀 for the first 2⃣1⃣ matches of #TATAIPL 2024 is out!

Which fixture are you looking forward to the most 🤔 pic.twitter.com/HFIyVUZFbo

— IndianPremierLeague (@IPL) February 22, 2024

ஐபிஎல் லீக் போட்டிகள் எப்படி..?

ஐபிஎல் 2024ல் லீக் வடிவத்தில் பங்கேற்கும் அனைத்து 10 அணிகளும் தங்களுக்குள் இரண்டு முறை ரவுண்ட் – ராபின் முறையில் மோதும். லீக் கட்டத்தின் முடிவில், புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் தகுதிச் சுற்று 1 க்கு முன்னேறும். அதேபோல், மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டரில் மோதும்.

தகுதிச் சுற்று 1ல் வெற்றி பெற்ற அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். அதே சமயம் தோற்கும் அணி எலிமினேட்டரில் வெற்றிபெறும் அணியை தகுதிச் சுற்று 2ல் எதிர்கொள்ளும். தகுதி சுற்று 2ல் வெற்றிபெறும் அணி ஐபிஎல் 2024 இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் இரண்டாவது அணியாக மாறும்.

ஐபிஎல் 2024 அணிகள்: சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.

ஐபிஎல் 2024 கேப்டன்கள்: எம்எஸ் தோனி (சென்னை சூப்பர் கிங்ஸ்), ரிஷப் பந்த் (டெல்லி கேப்பிடல்ஸ்), சுப்மன் கில் (குஜராத் டைட்டன்ஸ்), ஷ்ரேயாஸ் ஐயர் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்), கேஎல் ராகுல் (லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்), ஹர்திக் பாண்டியா (மும்பை இந்தியன்ஸ்), ஷிகர் தவான் (பஞ்சாப் கிங்ஸ்), சஞ்சு சாம்சன் (ராஜஸ்தான் ராயல்ஸ் ), ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் (ஆர்சிபி), பாட் கம்மின்ஸ் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்).

ஐபிஎல்லில் வெற்றிபெற்ற அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு..?

கடந்த ஆண்டு ஐபிஎல் 2023ல் சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரூ. 20 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. ஐபிஎல் 2023ல் இரண்டாம் இடத்தைப் பிடித்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ரூ.12.5 கோடியும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடரில் மூன்றாவது அணிக்கு ரூ.7 கோடியும், நான்காம் நம்பர் அணிக்கு ரூ.6.5 கோடி கொடுக்கப்பட்டது.

ஐபிஎல் 2024ல் ஐபிஎல் நிர்வாக ஏற்பாட்டாளர்கள் இன்னும் பரிசுத் தொகையை உறுதிப்படுத்தவில்லை என்றாலும், இதே தொகையை இந்தாண்டு வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

IPL 2024: இன்னும் 3 நாட்களில் ஐபிஎல்.. கேப்டன்கள் யார் யார்..? 10 அணிகள் எது..? முழு விவரம் இதோ!

Indian Premier League IPL 2024 Captains IPL 2024 Complete Schedule IPL 2024 Format IPL 2024 Prize Money IPL 2024 Teams IPL 2024 Venues IPL IPL 2024 IPL Schedule இந்தியன் பிரீமியர் லீக் ஐபிஎல் 2024 அணிகள் ஐபிஎல் 2024 இடங்கள் ஐபிஎல் 2024 கேப்டன்கள் ஐபிஎல் 2024 பரிசுத் தொகை ஐபிஎல் 2024 முழு அட்டவணை ஐபிஎல் 2024 வடிவம் ஐபிஎல் அட்டவணை ஐபிஎல் ஐபிஎல் 2024