ACTP news

Asian Correspondents Team Publisher

IPL 2024: Possibilities To Host Ipl 2024 Outside India Due To Lok Sabha Election

ஐபிஎல் 17வது சீசன் தொடங்க இன்னும் அதிக நாட்கள் இல்லை. கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய லீக் போட்டியான ஐ.பி.எல். வருகின்ற மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. இதற்கான மினி ஏலம் கடந்த டிசம்பர் மாதம் 18ம் தேதி நடைபெற்றது. 
ஐ.பி.எல். 17வது சீசன்:
ஐபிஎல் 17வது சீசனுக்கான அட்டவணை இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், மார்ச் மாதத்தின் இறுதி வாரத்தில் தொடங்கும் என்று நம்பப்படுகிறது. இப்படியான சூழ்நிலையில், இந்த முறை இந்தியாவில் ஐபிஎல் நடைபெறுமா என்பதுதான் பெரிய கேள்வியாக உள்ளது. 
ஐபிஎல் 2024 தொடங்கும் நேரத்தில், இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற இருக்கிறது. அனேகமாக, ஐபிஎல் போட்டியானது மார்ச் இறுதியில் தொடங்கி மே இறுதி வரை நடைபெறும். அதேபோல், நாடாளுமன்ற தேர்தலும் மார்ச் மாத இறுதியில் தொடங்கி மே நடுப்பகுதி வரை நடைபெறும். இந்த நேரத்தில், மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளதால், இந்தியாவில் ஐ.பி.எல். நடத்த முடியாமல் போவதற்கு சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது. 
கடந்த 2014ல் என்ன நடந்தது..? 
 2009ம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற்றபோது தென்னாப்பிரிக்காவில் ஐபிஎல் நடத்தப்பட்டது. இதற்கு பிறகு, 2014 மக்களவை தேர்தலின்போது, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் போட்டிகளை நடத்தப்பட்டது. இதையடுத்து, 2024 மக்களவை தேர்தலின்போதும், ஐபிஎல் வேறு நாடுகளில் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. 
ஐபிஎல் மாற்றப்படுவதற்கான காரணங்கள் என்ன..? 
மக்களவை தேர்தலின்போது ஐ.பி.எல். போட்டியானது கிட்டத்தட்ட மூன்று முறை வேறு நாடுகளில் நடத்தப்பட்டது. இதற்கு பின்னால் பல காரணங்கள் உள்ளது. முதலில், இந்த ஐ.பி.எல். போட்டியானது இரண்டு மாதங்கள் முழுமையான நடைபெறும். இதன் காரணமாக, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். மக்களவை தேர்தலையொட்டி, ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் வீரர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் கொடுப்பது கடினமாக இருக்கும்.
ஏனெனில் தேர்தலின்போதும், நாடு முழுவதும் பாதுகாப்பு படையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் நேரத்தில் போட்டிகள் நடத்தப்படுவதால், சட்டம் – ஒழுங்கில் நிறைய மாற்றங்கள் கொண்டு வர வேண்டிய அவசியம் ஏற்படும். இதையெல்லாம் தவிர்க்க இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படாமல் வேறு நாடுகளில் நடத்தப்படுவதே நல்லது என்று கருதப்படுகிறது.
கடந்த முறை என்ன நடந்தது..? 
2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலின்போது இந்தியாவில் ஐபிஎல் நடைபெற்றது. அப்போது, தேர்தல் மற்றும் போட்டிகளின்போது பாதுகாப்பு ஏற்பாடுகளில் சிறந்த சமநிலை கடைப்பிடிக்கப்பட்டது. வாக்குப்பதிவு கட்டத்தை மனதில் வைத்து போட்டிகளின் தேதிகளும் முடிவு செய்யப்பட்டன. இதுபோன்ற சூழ்நிலைகளில் இம்முறையும், தேர்தலுடன் ஐபிஎல் போட்டியும் இந்தியாவில் ஒரே நேரத்தில் நடத்தப்பட வாய்ப்புள்ளது. 
ஐபிஎல் சீசன் 17க்கு முன்னதாக இந்திய அணி, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதுதான் 2024 டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்திய அணி விளையாடும் கடைசி டி20 தொடராகும். இதற்கு பிறகு மார்ச் மாதம் தொடங்கும் ஐபிஎல் 2024ல் அனைத்து இந்திய வீரர்களும் பிஸியாகி விடுவார்கள். 
ஆப்கானிஸ்தான் டி20 போட்டிக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, திலக் வர்மா, ரின்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், முகேஷ் குமார்.

Source link