IPL 2024 MS Dhoni Deepak Chahar Sathyam Cinema theatre Chennai


 
சி.எஸ்.கே அணி வீரர்கள் சென்னை சத்யம் சினிமாஸ் திரையரங்கில் படம் பார்த்த்துவிட்டு வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கூலாக படம் பார்த்த சி.எஸ்.கே வீரர்கள்:
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இதில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. கடந்த வருடத்தை விட இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரசிகர்களின் வரவேற்பு அதிகமாக இருக்கிறது. முக்கியமாக இந்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல் தான் தோனிக்கு கடைசி சீசனாக பார்க்கப்படுகிறது.
அதேபோல், சென்னை அணியின் கேப்டனாக இந்த முறை ருதுராஜ் கெய்க்வாட் வழிநடத்துவதால் மேலும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதனிடையே ரசிகர்களால் தல என்று அழைக்கப்படும் எம்.எஸ்.தோனியின் இடத்தை ருதுராஜ் கெய்க்வாட் நிரப்புவாரா என்ற விவாதங்களும் சமூக வலைதளங்களில் நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரசிகர்கள் அன்புமழையில் திணறிய தோனி:

கடந்த மார்ச் 22 ஆம் தேதி நடைபெற்ற முதல் போட்டியிலேயே சி.எஸ்.கே அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் வெற்றிக் கொண்டாட்டத்துடன் இருக்கும் அந்த அணி வீரர்கள் சென்னையில் உள்ள சத்யம் சினிமாஸுக்கு சென்று படம் பார்த்துள்ளனர். அப்போது அங்கிருந்த ரசிகர்கள் ”தோனி, தோனி” என்று கரகோஷம் எழுப்பினார்கள்.
இது தொடர்பான வீடியோ தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதன்படி இந்த வீடியோவில் தியேட்டரில் இருந்து அந்த அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் தீபக் சாஹர் வெளியே வர அவருக்குப் பின்னால் தல தோனி வருகிறார்.

MS Dhoni, Deepak Chahar at Sathyam Cinema theatre in Chennai…..!!!!- Crowd cheering “Dhoni, Dhoni, Dhoni”.pic.twitter.com/Jp86ndjZvC
— Johns. (@CricCrazyJohns) March 24, 2024


முன்னதாக தியேட்டருக்கு எம்.எஸ்.தோனியின் வருகையைப் பார்த்த ரசிகர்கள் குவிந்தனர். இதனிடையே அவர்கள் பார்த்த படம் என்ன என்ற கேள்வியும் எழுந்தது. அந்த வகையில் தமிழ் நாட்டில் வெற்றிகரமாக தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கும் மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தைத்தான் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சூழலில் தங்களது அடுத்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வரும் மார்ச் 26 ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் படிக்க: RR Vs LSG Innings Highlights: சரவெடியாய் வெடித்த சஞ்சு சாம்சன் – லக்னோவிற்கு 194 ரன்கள் இலக்கு!
மேலும் படிக்க: IPL 2024: கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஐ.பி.எல் பேட்டர்கள்… ஆதிக்கம் செலுத்திய கோலி! அடுத்த இடத்தில் யார்?

மேலும் காண

Source link