IPL 2024 Jasprit Bumrah IPL Stats Records Performance IPL Team Mumbai Indians Know Full Details


ஐ.பி.எல் 2024:
ஐ.பி.எல் தொடரில் இதுவரை 16 சீசன்கள் முடிந்துள்ளது. அந்தவகையில் 17 வது ஐபிஎல் தொடர் மார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கேப்பிட்டல்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் கோப்பையை எதிர்நோக்கி விளையாட உள்ளது.
கவனிக்கத்தக்க வீரர் பும்ரா:
இந்த ஐபிஎல் தொடரில் கவனிக்கத்தக்க வீரராக இருப்பவர் ஜஸ்ப்ரித் பும்ரா. அந்தவகையில் கடந்த 2013 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் அறிமுகமானார். அதன்படி மும்பை அணி அவரை 1.20 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. அப்போதில் இருந்து மும்பை அணிக்காகத்தான் விளையாடி வருகிறார். 120 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 23.30 என்ற சராசரியுடன் 145 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
பும்ரா எடுத்த முதல் விக்கெட்:
ஐ.பி.எல் தொடரில் அறிமுகமான போது அவர் எடுத்து முதல் விக்கெட் பெங்களூர் அணி வீரர் விராட் கோலி உடையது  தான். கடந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக இவர் விளையாடவில்லை. ஆனால், 2022 இல் 25.53 சராசரியில் 15 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.அவரது சிறந்த பந்து வீச்சு பற்றி பார்த்தால் கடந்த 2022 ஆம் ஆண்டு கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் தான் சிறப்பாக விளையாடினார். அதாவது அந்த போட்டியில் முதலில் களம் இறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்களை எடுத்தது. இந்த போட்டியில் அற்புதமாக பந்து வீசிய பும்ரா 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
மொத்தம் 4 ஓவர்கள் வீசிய அவர் 1 ஓவர் மெய்டன் செய்து 10 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் எடுத்தார். இந்த முறை மும்பை இந்தியன்ஸ் அணிக்காகத்தான் விளையாட இருக்கிறார். அவருக்கு சம்பளமாக 12 கோடி ரூபாத் இந்த சீசனில் வழங்கப்பட உள்ளது. காயத்தில் இருந்து திரும்பியதில் இருந்து பும்ரா சிறப்பான ஃபார்மில் உள்ளார். ஐபிஎல் 2024ல் பர்பிள் நிற தொப்பியை பெற அவருக்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 
ஐ.பி.எல் புள்ளிவிவரம்:

போட்டிகள்: 120
விக்கெட்கள்: 145
சராசரி: 23.30
எக்கனாமி: 7.39
சிறந்த பந்து வீச்சு : 5/10
4 விக்கெட்கள் : 2
5 விக்கெட்டுகள் : 1

மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!
மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா – நடந்தது இதுதான்!

மேலும் காண

Source link