IPL 2024 CSK vs GT Standing Ovation For Ravindra Jadeja Chepauk Stadium Chennai Super Kings vs Gujarat Titans


ஐ.பி.எல் சீசன் 17:
ஐ.பி.எல் சீசன் 17 கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் முதல் லீக் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. அந்தவகையில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
அதேபோல், இதுவரை நடந்து முடிந்துள்ள 6 லீக் போட்டிகளிலும் ஹோம் மைதானத்தில் விளையாடிய அணிகள்தான் வெற்றி பெற்றிருக்கிறது. இந்நிலையில் தான் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக இன்று (மார்ச் 26) சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதுகிறது.
குஜராத் அணிக்கு எதிரான இறுதிப் போட்டி:
முன்னதாக கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் தான் மோதின.  ஐ.பி.எல் வரலாற்றில் இந்த இறுதிப் போட்டியை ரசிகர்கள் யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள்.  சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டன.
இறுதி ஓவரின் முதல் 4 பந்துகளிலும் பவுலரே ஆதிக்கம் செலுத்தியிருந்தார். குஜராத் அணி வீரர் மோஹித் சர்மா 5-வது பந்தை வீசினார். குஜராத் அணியினர் வெற்றியைக் கொண்டாட ஆயத்தமாகினர். அந்தப் பந்து வெற்றியைத் தீர்மானிக்கும் முதற்படியாகவே இருந்தது. ஸ்டிரைக்கில் ஜடேஜா நின்றுகொண்டிருந்தார்.
வெற்றியை தேடித்தந்த ஜடேஜா:
ஜடேஜா மீது அத்தனை விழிகளும் உற்று நோக்கின. வெற்றிக்கான ஒற்றை நம்பிக்கையாக ஜடேஜா மட்டுமே நின்று கொண்டிருந்தார். 5-வது பந்தை யார்க்கராக வீசும் முயற்சி. ஆனால் மோஹித் சர்மா தவறு செய்து விட்டார். யார்கர் மிஸ் ஆனது. பந்து ஸ்லாட்டில் விழுந்தது. அத்தனை ரசிகர்களின் நம்பிக்கையையும் ஆற்றலாகத் திரட்டி பந்தை சிக்சருக்கு விரட்டினார் ஜடேஜா. அரங்கம் அதிர்ந்தது. குஜராத் ரசிகர்களின் உற்சாகம் காணாமல் போனது. கடைசி பந்தில் சென்னை அணியின் வெற்றிக்கு 4 ரன்கள் தேவைப்பட்டது.

ஜடேஜாவை பாரட்டும் வகையில் இன்றைய போட்டியில் Standing Ovation கொடுக்க இருப்பதாக தகவல்!https://t.co/wupaoCz9iu | #ChennaiSuperKings #CSK #RAVINDRAJADEJA #IPLUpdate #IPL2024 pic.twitter.com/CP6hNQ1fv6
— ABP Nadu (@abpnadu) March 26, 2024

பரபரப்பின் உச்சத்தில் இருந்த மைதானத்தில் சென்னை அணி ரசிகர்களின் உற்சாகக் குரல் ஒலித்தது. கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்டினார் ஜடேஜா. இவ்வாறாக கடைசி இரண்டு பந்துகளில் சிக்ஸர் மற்றும் பவுண்டரி விளாசி சென்னை அணியின் ஐ.பி.எல் கோப்பை கனவை 5 வது முறையாக நிறேவேற்றிக்கொடுத்த ஜடேஜாவுக்கு பாராட்டுகள் குவிந்தன.
இந்நிலையில்தான் இந்த வெற்றிக்கு வித்திட்ட ஜடேஜாவை ரசிகர்கள் இன்று நடைபெறும் போட்டியின் மூலம் மரியாதை செய்யவுள்ளனர். அதாவது ஜடேஜா களத்தில் இறங்கும்போது ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி பாராட்ட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மேலும் படிக்க: IPL 2024 RCB vs PBKS: இறுதியில் அதிரடி காட்டிய தினேஷ் கார்த்திக்; பெங்களூரு 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!
மேலும் படிக்க: IPL 2024 Ruturaj Gaikwad: குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக கடைசி 5 போட்டிகள்…ருதுராஜ் கெய்க்வாட் செய்த தரமான சம்பவம்!
 

மேலும் காண

Source link