IPL 2024 All Team Captain Name List CSK DC KKR LSG MI RR RCB SRH PBKS | IPL 2024 Captain List: அதிரப்போகும் ஐ.பி.எல். 2024! கேப்டன்களை மாற்றிய அணிகள்


சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். 
புதிய கேப்டன்களுடன் ஐ.பி.எல். 2024:
அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது.  அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறது. அதன்படி, மார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ள முதல் போட்டியில் சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி அணிகள் மோத உள்ளன.
கேப்டன்கள் லிஸ்ட்:
முன்னதாக 2023 ஐபிஎல் தொடரில் இருந்த கேப்டனை மாற்றி விட்டு புதிய கேப்டனோடு 2024 ஐபிஎல் தொடரை சந்திக்க இரண்டு அணிகள் முடிவு செய்துள்ளன. அதில் முக்கியமான அணி மும்பை இந்தியன்ஸ். தங்கள் அணிக்கு ஐந்து ஐபிஎல் கோப்பைகள் வென்று கொடுத்த ரோகித் சர்மாவை நீக்கி விட்டு, புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமித்து இருக்கிறது.
அந்த வகையில் குஜராத் அணியை சுப்மன் கில் வழிநடத்த இருக்கிறார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பொறுத்தவரை தங்கள் அணியின் கேப்டனாக இருந்த எய்டன் மார்க்ரமை நீக்கி விட்டு ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸை நியமித்துள்ளது. டெல்லி அணியை பொறுத்தவரை கடந்த ஆண்டு விபத்தில் சிக்கிய  ரிஷப் பண்ட் உடல் நலம் தேறி பயிற்சிகள் மேற்கொண்டு வரவாதால் அவர் தான் டெல்லி அணியை வழிநடத்துவார் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
 
2024 ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ள ஐபிஎல் அணிகளின் கேப்டன்கள் பட்டியல்:
 




            அணிகள் 


      கேப்டன்கள்



         சென்னை சூப்பர் கிங்ஸ்
             எம்.எஸ்.தோனி



          மும்பை இந்தியன்ஸ்

           ஹர்திக்      பாண்ட்யா



         ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

           பாப் டுப்ளிசிஸ்



          டெல்லி கேபிட்டல்ஸ்

         ரிஷப் பண்ட்



         சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

       பாட் கம்மின்ஸ்



          கொல்கத்தா நைட்ரைடர்ஸ்

      ஸ்ரேயஸ் அய்யர்



          ராஜஸ்தான் ராயல்ஸ்

        சஞ்சு சாம்சன்



         குஜராத்   டைட்டன்ஸ்

      சுப்மன் கில்



       லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

       கே.எல்.ராகுல்



           பஞ்சாப் கிங்ஸ்

       ஷிகர் தவான்

 
 
மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!
 
மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா – நடந்தது இதுதான்!
 

மேலும் காண

Source link