INDvsENG 5th Test: தரம்சாலா மைதானம் எப்படி? அதிக, குறைந்த ரன்கள், விக்கெட்டுகள் எடுத்தவர்கள் யார்? யார்? – ஓர் அலசல்

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் 4 டெஸ்ட் போட்டிகள் நிறைவு பெற்ற நிலையில், இந்தியா 3 டெஸ்ட் போட்டிகளில் வென்று இந்த தொடரை வென்றுள்ளது.

மைதானம் எப்படி?

3-1 என்ற கணக்கில் தொடரை இந்தியா கைப்பற்றியுள்ள நிலையில், இரு அணிகளும் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி இமாச்சல பிரதேசத்தில் உள்ள தரம்சாலா மைதானத்தில் நாளை தொடங்குகிறது.

தரம்சாலா மைதானத்தில் நாளை தொடங்கும் இந்த போட்டி இமாச்சல பிரதேச கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. இந்த மைதானத்தை பற்றி கீழே விரிவாக காணலாம்.

இதுவரை நடந்த டெஸ்ட் போட்டிகள்     – 1

இந்தியா வெற்றி   பெற்றது                       – 1

வெளிநாட்டு அணி வெற்றி பெற்றது     – 0

டிரா                                                                       - 0

முதலில் பேட்டிங் செய்த அணி வெற்றி  – 0

2வது பேட்டிங் செய்த அணி வெற்றி       – 1

அதிகபட்ச ஸ்கோர்                      - இந்தியா 332 ரன்கள்/10 ( ஆஸி. எதிராக) 2017

குறைந்தபட்ச ஸ்கோர்           - ஆஸ்திரேலியா 137 ரன்கள்/10 (இந்தி. எதிராக) 2017

முதல் இன்னிங்ஸ் சராசரி ஸ்கோர் – 300 ரன்கள்

2வது இன்னிங்ஸ் சராசரி ஸ்கோர் – 332 ரன்கள்

3வது இன்னிங்ஸ் சராசரி ஸ்கோர் – 137 ரன்கள்

4வது இன்னிங்ஸ் சராசரி ஸ்கோர் – 106 ரன்கள்

அதிக ரன்கள்                                      – ஸ்டீவ் ஸ்மித் – 128 ரன்கள் 2 இன்னிங்ஸ்

மொத்த அரைசதங்கள்               – 6

அதிக அரைசதம்                            – கே.எல்.ராகுல்

அதிக சதம்                                    – ஸ்டீவ் ஸ்மித் ( 1 சதம்)

மொத்த சிக்ஸர்கள்                    – 13 சிக்ஸர்கள்

அதிக சிக்ஸ் அடித்த வீரர்           – ஜடேஜா ( 4 சிக்ஸர்)

மொத்த பவுண்டரிகள்                  – 102

அதிக பவுண்டரிகள் அடித்தவர் – கே.எல்.ராகுல் – 18 பவுண்டரி

அதிக விக்கெட்டுகள்                - நாதன் லயன், உமேஷ் யாதவ் – 5 விக்கெட்டுகள்

ஒரே இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் – நாதன் லயன்

எப்படி பார்ப்பது?

இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் இந்த டெஸ்ட் போட்டி நாளை காலை 9.30 மணிக்கு தொடங்க உள்ளது. இதை ஸ்போர்ட்ஸ் 18, கலர்ஸ் சினி ப்ளக்ஸ் தொலைக்காட்சிகளிலும், ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் காணலாம்.

இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதி வரும் இந்த டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதல் டெஸ்ட்டில் வெற்றி பெற்ற பிறகு, எந்த போட்டியிலும் வெற்றி பெறவில்லை. அடுத்தடுத்த போட்டிகளில் அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டாலும் முக்கிய பேட்ஸ்மேன்களான ஜானி பார்ஸ்டோ, ஸ்டோக்ஸ், ஜோ ரூட் ஆகியோர் ஜொலிக்கத் தவறிவிட்டனர். ஜோ ரூட் கடந்த டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தார். ஏற்கனவே தொடரை இழந்த இங்கிலாந்து அணி கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற முனைப்புடன் ஆடுவார்கள் என்று கருதப்படுகிறது.

அதேபோல, இந்திய அணி ஏற்கனவே தொடரை வென்றாலும் கடைசி டெஸ்ட் போட்டியை வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மேலும் முன்னேற்றம் காணலாம் என்று கருதப்படுகிறது.

மேலும் படிக்க: Ranji Trophy 2024: மத்திய பிரதேசத்தை வீழ்த்திய விதர்பா.. கெத்தாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தல்..!

மேலும் படிக்க: Rohit Sharma: இன்னும் 6 சிக்ஸர் போதும்! உலகில் யாரும் படைக்க முடியாத சாதனை படைக்கப்போகும் ரோஹித் சர்மா..!

Source link