IND Vs ENG Test Rahul Dravid Talks About Virat Kohli Absence Vs Eng Test | IND Vs ENG Test: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்… விராட் கோலி இல்லாததும் நல்லதுதான்

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடர்:
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடியது. இந்த ஆண்டில் சொந்த நாட்டில் இந்திய அணி விளையாடிய முதல் தொடர் இது என்பதால் இந்திய அணி மீதான எதிர்பார்ப்பு எகிறியது. அதன்படி, இந்திய அணியும் 3-0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. அதன்படி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியை எதிர்கொள்கிறது இங்கிலாந்து அணி. அதன்படி, ஜனவரி 25 ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடரானது மார்ச் 11ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடர் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அந்த வகையில் முதல் இரண்டு போட்டிகளில் இருந்து விலகிய விராட் கோலிக்கு பதில் யார் களமிறக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர் ரசிகர்கள். இந்நிலையில் விராட் கோலியின் விலகல் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய பயிற்சியாளருமான ராகுல் ட்ராவிட் பேசியுள்ளார்.
நல்ல விசயம் தான்:
இது தொடர்பாக பேசிய அவர், “விராட் கோலி போன்ற ஒரு தரமான வீரரை இந்திய அணி தற்போது இழந்துள்ளது சற்று பின்னடைவுதான். ஏனெனில் அவர் ஒரு அற்புதமான வீரர் ஆனால் அவர் தற்போது அணியில் இல்லாததும் ஒரு நல்ல விசயம்தான். ஏனெனில் அவருக்கு பதிலாக வேறு யாரையாவது அந்த இடத்தில் பயன்படுத்தி அவர்களது செயல்பாட்டை முன்னேற்ற இந்த போட்டிகள் கொஞ்சம் உதவியாக இருக்கும்.
அந்த வகையில் விராட் கோலியின் இடத்தில் மற்றொரு வீரர் விளையாடி அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். மேலும் விராட் கோலிக்கு தற்போது எங்களால் உதவ முடியாத சூழலில் இருப்பதால்தான் அவர் இந்த இரண்டு போட்டிகளில் விளையாட முடியவில்லை” என்று கூறியுள்ளார்.
 
மேலும் படிக்க: IND vs ENG: ஷார்ட் பந்தில் இரையாகும் ஷ்ரேயாஸ் ஐயர்! இங்கிலாந்துக்கு எதிராக சரி செய்வாரா?
 
மேலும் படிக்க: India vs England Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அஸ்வின் படைக்க இருக்கும் சாதனை! விவரம் உள்ளே!
 

Source link