Ind vs Eng: அறிமுக டெஸ்ட்… இந்திய அணிக்கு தலைவலியாக அமைந்த டாப் 5 ஸ்பின்னர்கள் யார் தெரியுமா?

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அதன்படி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட நீண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியுடன் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி கடந்த 25 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இந்த முதல் டெஸ்ட் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. அதன்படி, இங்கிலாந்து அணி தற்போது 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காக அமைந்தது சுழற்பந்து வீச்சளர் டாம் ஹார்ட்லியின் பந்து வீச்சுதான். அதன்படி, இந்திய அணிக்கு எதிராக அறிமுக வீரராக களம் இறங்கிய முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அனைவரின் பார்வையையும் தன் பக்கம் திருப்பினார். இனிவரும் போட்டிகளிலும் இவரின் பந்து வீச்சுதான் இந்திய அணியினருக்கு பெரும் தலைவலியாக அமையும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த காலங்களில் அறிமுக டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு தலைவலியாக அமைந்த சுழற்பந்து வீச்சாளர்களின் பட்டியலை இந்த தொகுப்பில் பார்ப்போம்:

ஜேசன் கிரெஜா:

ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஜேசன் கிரெஜா கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் 6 ஆம் தேதி இந்திய அணிக்கு எதிராக சர்வதேச டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். அதன்படி, நாக்பூரில் நடைபெற்ற அந்த டெஸ்ட் போட்டியில் 12 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதன் மூலம் இந்தியாவுக்கு எதிராக அறிமுகமான டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

அஜந்தா மெண்டிஸ்:

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஜந்தா மெண்டிஸ் கடந்த 2008 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார். அந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும் எடுத்து தான் அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலே 8 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். முன்னதாக இந்த போட்டியில் இலங்கை அணி 239 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. இதற்கு முக்கிய பங்காக இவரது பந்து வீச்சு பார்க்கப்பட்டது.

நைமூர் ரஹ்மான்:

வங்கதேச அணியின் சுழற்பந்து வீச்சாளரான நைமூர் ரஹ்மான் இந்திய அணிக்கு எதிராகத்தான் தன்னுடைய சர்வதேச டெஸ்ட் வாழ்க்கையை தொடங்கினார். அதன்படி, கடந்த 2000-ஆம் ஆண்டில் இந்திய அணிக்கு எதிராக அறிமுகமான இவர், 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

ஸ்டீவ் ஓ’கீஃப்:

ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஸ்டீவ் ஓ’கீஃப் கடந்த 2017 ஆம் ஆண்டில் பார்டர் – கவாஸ்கர் டிராபியில் இந்திய அணிக்கு எதிராக அறிமுகமானார். அதன்படி, தான் இந்தியாவிற்கு எதிராக அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக 12 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளும் , இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளும் இதில் அடங்கும்.

டாட் மார்பி:

கடந்த 2023 ஆம் ஆண்டு பார்டர் – கவாஸ்கர் போட்டியில்  சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு எதிராக அறிமுகமானவர் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் டாட் மார்பி. இந்த போட்டியில் 47 ஓவர்கள் வீசிய டாட் மார்பி  7 விக்கெட்டுகளை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link